IND vs AUS : இந்தூர் மாதிரி மைதானத்தில் அவரோட பேட்டிங் தான் கரெக்ட் – பாராட்டிய ரோஹித் சர்மா

Rohit Press
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது இந்தூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்து இந்த தொடரில் முதல் முறையாக பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டி மூன்று நாட்களுக்குள் முடிந்ததும், இந்திய அணியின் தோல்விக்கும் மைதானத்தின் மோசமான தன்மையே காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

IND vs AUS Indore Pitch

- Advertisement -

அதோடு இந்த மைதானம் மோசமான தன்மையுடையது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யும் மூன்று தகுதி இழப்பு புள்ளிகளை வழங்கியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கிய முதல் ஓவரில் இருந்தே பந்து நன்றாக திரும்பியதால் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சுக்கு எதிராக திணறிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் முதல் இன்னிங்ஸில் 109 ரன்களை மட்டுமே குவித்தனர்.

அதிலும் குறிப்பாக சுழற்பந்துவீச்சினை சிறப்பாக சமாளித்து விளையாடும் இந்திய வீரர்களே இப்படி ஆஸ்திரேலியா அணியிடம் சரணடைந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு தங்களது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியானது இந்திய பந்துவீச்சை சமாளித்து 197 ரன்களை குவித்தது. இதன்காரணமாக 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 163 ரன்கள் மட்டுமே குவித்தது.

Shreyas Iyer

இதன் காரணமாக 76 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றிக்கான ரன்களை குவித்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக புஜாரா மட்டும் சிறப்பாக விளையாடி 59 ரன்கள் அடித்திருந்தார். அவரை தவிர்த்து மற்ற அனைவரது ஆட்டமும் சுமாராகவே இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இரண்டாவது இன்னிங்ஸில் ஷ்ரேயாஸ் ஐயர் செய்த பேட்டிங்தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஏனெனில் அனைவரும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக திணறிய வேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் மூன்று பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 27 பந்துகளில் 26 ரன்கள் அதிரடியாக குவித்தார். இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரை போன்று விளையாடுவது தான் இது போன்ற மோசமான ஆடுகளங்களில் நாம் செய்ய வேண்டிய ஒரு மாற்றமாக இருக்கும் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அவரது பேட்டிங் ஸ்டைலை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : எப்போ பாதி மீசைய எடுக்கப்போறீங்க? புஜாரா சிக்ஸரால் அஷ்வினுக்கு பழைய சவாலை நினைவுப்படுத்திய ராஜஸ்தான் அணி

பந்து நன்றாக திரும்பும் இதுபோன்ற ஆடுகளங்களில் பயந்து தடுப்பாட்டத்தை ஆடுவதை விட ஷ்ரேயாஸ் ஐயர் மாதிரி அடித்து ஆடுவது தான் ஒரே தீர்வு. இந்தூர் மாதிரியான மைதானங்களில் அவரைப் போன்று அதிரடியாக விளையாடினால் தான் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நாம் ஆதிக்கத்தை வெளிப்படுத்த முடியும். சில வீரர்கள் நின்று ஆட வேண்டும் என்று நினைப்பார்கள். சில வீரர்கள் அடித்து ஆட வேண்டும் என்று நினைப்பார்கள். எப்போதும் 100,90,80 ரன்களை அடிப்பதைவிட விரைவாக ரன்களை குவித்து ஆடுவதும் அணிக்கு பெரிய அளவில் உதவும் என ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement