12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கு சென்றுள்ள ரோஹித் சர்மா – அடப்பாவமே

Rohit Sharma Rishabh Pant
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்ற 44-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நவி மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் ராஜஸ்தானை பதம் பார்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை 8 தொடர்ச்சியான தோல்விகளுக்கு பின் முதல் வெற்றியை பதிவு செய்து நிம்மதி அடைந்துள்ளது. அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 158/6 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

அந்த அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன், சிம்ரோன் ஹெட்மையர் போன்ற முக்கிய வீரர்கள் ஏமாற்றிய நிலையில் அதிகபட்சமாக நட்சத்திர தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 67 (52) ரன்களும் ரவிச்சந்திரன் அஸ்வின் 21 (9) ரன்களும் குவித்தனர். மும்பை சார்பில் அதிகபட்சமாக ரித்திக் ஷாக்கின் மற்றும் ரிலே மெரிடித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

ஆறுதலடைந்த மும்பை:
அதை தொடர்ந்து 159 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா 2 (5) ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றமளிக்க அடுத்த ஒருசில ஓவர்களில் 26 (18) ரன்கள் எடுத்து இஷன் கிஷன் அவுட்டானர். அதனால் ஏற்பட்ட சரிவை அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 5 பவுண்டரி 2 சிக்சருடன் 51 (39) ரன்கள் எடுத்து சரி செய்ய அவருக்கு உறுதுணையாக நின்ற இளம் வீரர் திலக் வர்மா 35 (20) ரன்களும் எடுத்து கடைசி நேரத்தில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

SKY tilak Varma

இறுதியில் வெறும் 9 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 20* ரன்கள் எடுத்து டிம் டேவிட் நல்ல பினிஷிங் கொடுத்ததால் 19.2 ஓவர்களில் 161/5 ரன்களை எடுத்து மும்பை முதல் வெற்றியை சுவைத்தது. மறுபுறம் சஹால், அஷ்வின், போல்ட் போன்ற பவுலர்கள் தலா 1 விக்கெட் எடுத்து ராஜஸ்தானின் வெற்றிக்கு போராடிய போதிலும் பேட்டிங்கில் பெரிய ரன்கள் குவிக்க தவறிய அந்த அணி பங்கேற்று 9 போட்டிகளில் 3-வது தோல்வியை பதிவு செய்தாலும் புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

- Advertisement -

ஏமாற்றிய ஹிட்மேன்:
முன்னதாக 5 கோப்பைகளை வென்று கொடுத்து வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என பெயரெடுத்து அதன் வாயிலாக இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ள நட்சத்திர வீரர் ரோகித் சர்மா நேற்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த நன்னாளில் முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை அவருக்கு பிறந்தநாள் பரிசளித்தது. ஆனால் தனது பிறந்த நாளில் அவர் அதிரடியாக பேட்டிங் செய்வார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் வெறும் 2 ரன்களில் அவுட்டான அவர் தனது சுமாரான பார்மில் தொடர்ந்து நீடிக்கிறார்.

Ganguly-ipl
IPL MI

ஏனெனில் இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் வெறும் 155 ரன்கள் 17.22 என்ற சுமாரான பேட்டிங் சராசரி 123.02 என்ற ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் எடுத்துள்ளார். இருப்பினும் இமாலய சிக்ஸர்கள் மிரட்டலான பவுண்டரிகள் என அதிரடிக்கு பெயர் போய் ஹிட்மேன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் அவரின் தரத்திற்கு இதெல்லாம் கண்டிப்பாக குறைவான ரன்களாகும்.

- Advertisement -

2010 சாதாரண ரோஹித்:
கடைசியாக கடந்த 2019 ஐபிஎல் தொடரில் 405 ரன்கள் எடுத்த அவர் அதன்பின் கடந்த 2 வருடங்களாக 400 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் சுமாராக செயல்பட்டு வருகிறார். 2020இல் 332 ரன்களை 27.66 என்ற சுமாரான சராசரியில் எடுத்த அவர் 2021இல் 381 ரன்களை 29.30 என்ற ஓரளவு மட்டுமே சிறப்பான சராசரியில் எடுத்துள்ளார். இப்படி இந்த வருடம் மட்டுமல்லாது சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் ரன்களை குவிக்க தடுமாறும் அவரை 5 கோப்பைகளை வென்று கொடுத்த காரணத்தால் யாரும் பெரிதாக கண்டு கொள்வதுமில்லை கேள்விகளும் கேட்பதும் இல்லை.

Rohit Sharma Deccan Chargers

அதிலும் கடைசியாக கடந்த 2021இல் அரை சதமடித்த அவர் தனது ஐபிஎல் கேரியரில் 2010க்கு பின்பு 2-வது முறையாக அதிக இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் தவித்து வருகிறார். அந்த விவரம் இதோ:
1. 2009 – 2010 : 22 இன்னிங்ஸ்களில் அரை சதம் அடிக்கவில்லை, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக
2. 2021 – 2022* : 17 இன்னிங்ஸ்களில் அரை சதம் அடிக்கவில்லை, மும்பை அணிக்காக.

இதையும் படிங்க : ராஜஸ்தானின் புதிய சூப்பர் ஸ்டாராக ஜோஸ் பட்லர் ! 10 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை – என்ன தெரியுமா

கடந்த 2010 போன்ற காலகட்டத்தில் மிடில் ஆர்டரில் விளையாடிய ரோகித் சர்மா எந்த அளவுக்கு சாதாரண ரோகித் சர்மாவாக இருந்ததையும் 2013க்கு பின்பு தொடக்க வீரராக களமிறங்கி சரவெடியாக பேட்டிங் செய்து ஹிட்மேன் என பெயரெடுத்த ரோகித் சர்மாவையும் ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அந்த வகையில் 2010 காலகட்டத்தில் எப்படி சாதாரண ரோகித் சர்மாவாக இருந்தாரோ அவர் மீண்டும் தற்போது திரும்பியுள்ளார். அவரின் இந்த சுமாரான பேட்டிங் இந்த வருட ஐபிஎல் தொடரில் மும்பை முதல் அணியாக வெளியேறுவதற்கு ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது.

Advertisement