அணியின் நலனுக்காக கபில் தேவ், டிராவிட் வரிசையில் 12 வருடங்கள் கழித்து சுயநலமற்ற முடிவை எடுத்த ஹிட்மேன் – ஃபினிஷிங் வீடியோ

Rohit Sharma 12
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. ஜூலை 27ஆம் தேதி பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஆரம்ப முதலே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சாய் ஹோப் 43 (45) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து வெறும் 115 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு இலக்கு குறைவாக இருந்ததால் இளம் வீரர்கள் விளையாடட்டும் என்ற நோக்கத்தில் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய ஓப்பனிங் இடத்தை இஷான் கிஷானுக்கு கொடுத்து சுயநலமற்ற முடிவை எடுத்தார்.

- Advertisement -

சுயநலமற்ற முடிவு:
அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்ட இஷான் கிஷான் தேவையான ரன்களை எடுத்த நிலையில் எதிர்ப்புறம் சுப்மன் கில் 7, சூரியகுமார் யாதவ் 19, ஹர்திக் பாண்டியா 5 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அப்போதும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 2 சீனியர் வீரர்கள் களமிறங்காமல் ஷார்துல் தாக்கூருக்கு வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் தாக்கூரும் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 52 (46) ரன்கள் எடுத்து அசத்திய இசான் கிசான் வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் ரவீந்திர ஜடேஜா 16* ரன்கள் எடுத்த நிலையில் ஒரு வழியாக 7வது வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 பவுண்டரிகளை அடித்து 12* ரன்களுடன் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து 22.5 ஓவரிலேயே இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. அந்த வகையில் இந்த போட்டியில் அணியின் நலனுக்காக இசான் கிசான் போன்ற இளம் வீரர்கள் விளையாடட்டும் என்ற நோக்கத்தில் ரோகித் சர்மா நடந்து கொண்டது ரசிகர்களின் பாராட்டுகள் பெற்றது.

- Advertisement -

சொல்லப்போனால் ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறிய அவர் கடந்த 2013 சாம்பியன்ஸ் டிராபில் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனியின் மகத்தான முடிவால் நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்து கடந்த 10 வருடங்களாக மிகச் சிறப்பாக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு 7வது இடத்தில் களமிறங்கிய அவர் 12 வருடங்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக நேற்றைய போட்டியில் தான் 7வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.

இருப்பினும் 2011இல் சாதாரண வீரராக களமிறங்கிய அவர் தற்போது உழைத்து திறமையால் கேப்டனாக முன்னேறி 12 வருடங்கள் கழித்து அணியின் நலனுக்காக தாமே 7வது இடத்தில் களமிறங்கும் சுயநலமற்ற முடிவை எடுத்தார் என்றே சொல்லலாம். அத்துடன் இந்த சுயநலமற்ற முடிவால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 7வது இடத்தில் களமிறங்கிய 3வது இந்திய கேப்டன் என்ற தனித்துவமான பெருமையும் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

இதையும் படிங்க:IND vs WI : 49 வருட இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் அரிதான சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா – குல்தீப் யாதவ், விவரம் இதோ

இதற்கு முன் கடந்த 1983ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் ஒரு போட்டியில் அப்போதைய கேப்டன் கபில் தேவ் 7வது இடத்தில் விளையாடினார். அதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற 2007 உலக கோப்பையில் பெர்முடாவுக்கு எதிராக ராகுல் டிராவிட் 7வது இடத்தில் களமிறங்கினார். அவர்களது வரிசையில் தற்போது ரோகித் சர்மாவும் இந்த போட்டியில் 7வது களமிறங்கி சாதனை புத்தகத்தில் தனது பெயரை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement