ஐபிஎல் அப்றம் நாடு தான் முக்கியம், தனது கேரியரின் டாப் 5 மறக்க முடியாத தருணங்களை வெளியிட்ட ஹிட்மேன் ரோஹித் சர்மா

Rohit Sharma Sachin tendulkar
- Advertisement -

மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கடந்த 2006ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பு பெற்று ரொம்பவே தடுமாறி வந்தார். இருப்பினும் கேப்டன் தோனி 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ஷிகர் தவானுடன் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பைக் கொடுத்ததை பயன்படுத்திய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை அடித்து டி20 கிரிக்கெட்டில் 4 சதங்களை அடித்து எளிதில் உடைக்க முடியாத சாதனைகளை படைத்தார்.

மேலும் ஃபுல் ஷாட்களை அடிப்பதில் கில்லாடியாக செயல்பட்ட அவர் சர்வதேச அளவில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரராக சரித்திரம் படைத்து 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்து மாபெரும் உலக சாதனை படைத்தார். அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பைப் பெற்று அசத்தி வரும் அவர் லண்டன் ஓவல் மைதானத்தில் சதமடித்து வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் சரிப்பட்டு வர மாட்டார் என்ற விமர்சனங்களை தூளாக்கி தன்னை சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

டாப் 5 தருணங்கள்:
இதற்கிடையே ஐபிஎல் தொடரில் 2013 – 2021 வரையிலான காலகட்டங்களில் அசால்டாக 5 கோப்பைகளையும் வென்ற காரணத்தால் இன்று இந்தியாவின் முழு நேர கேப்டனாக உருவெடுத்துள்ள அவர் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாகவும் போற்றப்படுகிறார். இந்நிலையில் ஹிட்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர் தம்முடைய 17 வருட கேரியரில் மறக்க முடியாத டாப் 5 தருணங்களை தேர்வு செய்துள்ளார். ஆனால் அதில் ஐபிஎல் தொடரில் எந்த தருணத்தையும் தேர்ந்தெடுக்காத அவர் முழுவதுமாக இந்தியாவுக்காக வெளிப்படுத்திய நினைவுகளை தேர்ந்தெடுத்துள்ளார். அமெரிக்காவில் தம்முடைய அகடமி துவக்க விழாவில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்த அந்த பட்டியலை பற்றி பார்ப்போம்.

1. டி20 உலகக்கோப்பை: கடந்த 2007 டி20 உலக கோப்பையில் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் ஃபைனலில் கடைசி நேரத்தில் சரவெடியாக 30* (16) ரன்கள் எடுத்த அவர் வெற்றியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

- Advertisement -

அது தான் ரோகித் சர்மா மிகவும் தரமான வீரர் என்று அடையாளப்படுத்திய முதல் தருணமாகவும் அமைந்தது. அந்த வகையில் 2007 டி20 உலக கோப்பையை தோனி தலைமையில் வென்றதே தம்முடைய கேரியரின் முதல் மறக்க முடியாத சிறந்த தருணமாக ரோகித் சர்மா தேர்ந்தெடுத்துள்ளார்.

2. முதல் சதம்: அனைத்து பேட்ஸ்மேன்களும் நாட்டுக்காக அடித்த தங்களுடைய முதல் சதத்தை எப்போதுமே மறக்க மாட்டார்கள். அந்த வகையில் கடந்த 2013இல் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விடை பெறுவதற்காகவே வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் ரோகித் சர்மா 177 (301) ரன்கள் குவித்து தன்னுடைய முதல் சதத்தை அடித்தார். அதிலும் தன்னுடைய முதல போட்டியிலேயே 177 ரன்கள் அடித்த அவர் அறிமுகப் போட்டியில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தது மற்றொரு மறக்க முடியாத தருணமாக தேர்ந்தெடுத்துள்ளார்.

- Advertisement -

3. காபா டெஸ்ட்: கடந்த 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டான பின் நாடு திரும்பிய விராட் கோலிக்கு பதிலாக ரஹானே தலைமையில் கொதித்தெழுந்த இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா மண்ணில் சரித்திர வெற்றியை பதிவு செய்தது.

அதிலும் குறிப்பாக 32 வருடங்களாக காபா மைதானத்தில் தோற்காமல் இருந்த ஆஸ்திரேலியாவை இளம் வீரர்களுடனேயே வீழ்த்திய இந்திய அணியில் இடம் பிடித்த ரோகித் சர்மா அந்த வெற்றியையும் தம்முடைய கேரியரில் சிறந்த தருணமாக தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

4. சச்சினுடன் பார்ட்னர்ஷிப்: கடந்த 2008இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற சிபி முத்தரப்பு கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வென்றதை மறக்க முடியாது. அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் அரையிறுதியில் 240 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு 117* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்த சச்சினுடன் 4வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோஹித் சர்மா 66 ரன்கள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

அப்படி தம்முடைய ரோல் மாடலாக கருதப்படும் சச்சினுடன் அமைத்த முதல் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கேரியரின் மறக்க முடியாத சிறந்த தருணம் என்றும் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

5. சரவெடி 264: கடந்த 2014இல் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விஸ்வரூபம் எடுத்து வெளுத்து வாங்கிய ரோகித் சர்மா இரட்டை சதடித்தும் ஓயாமல் 264* ரன்கள் குவித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக மாபெரும் உலக சாதனை படைத்தார்.

இதையும் படிங்க:ரோஹித் சர்மாவின் மகளிடம் நான் சத்தியம் செய்திருந்தேன். அதற்காக தான் இது – முதல் அரைசதம் குறித்து திலக் வர்மா நெகிழ்ச்சி

குறிப்பாக ஒரு அணி அடிக்க வேண்டிய ஸ்கோரை ஒரே ஆளாக அடித்து அன்றைய நாளில் பெற்று கொடுத்த வெற்றி தம்முடைய கேரியரின் சிறந்த தருணம் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Advertisement