ரோஹித் சர்மாவின் மகளிடம் நான் சத்தியம் செய்திருந்தேன். அதற்காக தான் இது – முதல் அரைசதம் குறித்து திலக் வர்மா நெகிழ்ச்சி

Tilak-and-Samaira
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று கயானாவில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக மிடில் ஆடர் பேட்ஸ்மேன் திலக் வர்மா 41 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர் மற்றும் ஐந்து பவுண்டரி என 51 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதன் பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 18.5 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதலாவது அரை சதத்தை பதிவுசெய்த திலக் வர்மா வித்தியாசமான முறையில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். அவரது அந்த செலிப்ரேஷன் விடியோவும் இணையத்தில் அதிகளவு வைரலாகி இருந்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து அவரது இந்த செலிப்ரேஷனுக்கு என்ன காரணம்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த திலக் வர்மா கூறுகையில் : இந்த அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளான சமைராவிற்கு சமர்ப்பிக்கிறேன். ஏனெனில் அவருடன் இருக்கும் எனது உறவு மிக அழகான ஒன்று.

- Advertisement -

சமைரா எனக்கு மிகவும் நெருக்கம். அதற்காகத்தான் இந்த வித்தியாசமான முறையில் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தின். நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும்போது இப்படி தான் விளையாடுவோம். ஆகையால் நான் எப்போது சர்வதேச கிரிக்கெட்டில் அரைசதமோ அல்லது சதமோ அடிக்கிறேனோ அதனை சமைராவிற்கு அர்ப்பணிப்பதாக அவரிடம் சத்தியம் செய்திருந்தேன்.

இதையும் படிங்க : தன்னுடைய தரமான ஆல் டைம் கனவு சிஎஸ்கே அணியை வெளியிட்ட சிவம் துபே, கலாய்த்த தீபக் சஹர் – காரணம் இதோ

அதற்காகவே நான் இந்த போட்டியில் இந்த அரைசதத்தை இப்படி கொண்டாடியதாகவும், இந்த சதம் சமைராவிற்கு தான் என திலக் வர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement