இந்திய அணியில் அதிரடி மாற்றம்..! ரெய்னாவா ராகுலா..? ராகுலின் குடுமி கோலி கையில்..! – காரணம் இதுதான்..?

Advertisement

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி உற்சாகத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் இன்று (ஜூலை 12) நோட்டிங்ஹம்மில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் மிடில் பேட்டிங் ஆர்டரில் யார் களமிறங்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
kohli
இந்திய அணியை பொறுத்த வரை தற்போது பேட்டிங் ஆர்டரில் வலுவான நிலையில் தான் உள்ளது. இதில் துவக்க ஆட்டக்காரர்கள் பொறுத்தவரை எந்த வித குழப்பமும் இல்லை. ஆனால், மிடில் ஆர்டரில் யாரை களமிறக்க போகிறார்கள் என்பது தான் மிக பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்த தொடருக்கு முன்னாள் 3 வது ஆர்டரில் கோலி இறங்கி இருந்தார்.

ஆனால், சமீபத்தில் நடைபெற்று வரும் சில போட்டிகளாக கே எல் ராகுல் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவருக்கு பின்னல் தான் கோலி இறங்குகிறார். ஆனால், 4வது மற்றும் 5வது வரிசையில் யாரை களமிறக்க வேண்டும் என்று கோலி மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார். ஏனெனில் இந்த வரிசையில் தற்போது ரெய்னா களமிறக்கபடுவாரா ,இல்லை கே எல் ராகுல் பேட்டிங் ஆர்டரில் கொஞ்சம் கீழிறக்க படுவாரா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
rahul
இந்திய அணியில் ராகுல் 3வது பேட்டிங் வரிசையில் இறங்க வேண்டும். ஏனெனில் தவான் மற்றும் ரோஹித் துவக்க ஆட்டக்காரர்களாகே இருப்பார்கள். அணியின் கேப்டன் கோலி 4வது ஆர்டரில் இறங்க வேண்டும். இதை தவிர ஆடும் XI -ல் எந்த ஒரு மாற்றமும் செய்ய வேண்டியது இல்லை என்று முன்னாள் இந்திய வீரர் சேவாக்கும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement