நீண்ட நாட்கள் கழிச்சு ஆட்டநாயகன் வெல்ல இதான் காரணம்.. குழந்தையா வந்த எனக்கு கெளரவம் கிடைச்சுருக்கு.. ரோஹித் பேட்டி

Rohit sharma 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் இருபதாம் தேதி நடைபெற்ற 38வது போட்டியில் சென்னையை 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. மும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 177 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜடேஜா 53*, துபே 50, ஆயுஷ் மாத்ரே 32 ரன்கள் எடுத்த நிலையில் மும்பைக்கு அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்த விளையாடிய மும்பைக்கு நம்பிக்கை நட்சத்திரம் ரோகித் சர்மா நீண்ட நாட்கள் கழித்து அபாரமாக விளையாடி 76* ரன்கள் குவித்தார். அவருடன் சூரியகுமார் யாதவ் 68* ரன்கள் எடுத்ததால் ஓவரிலேயே இலக்கைத் தொட்ட மும்பை தங்களுடைய 4வது வெற்றியை பெற்றது. மறுபுறம் 6வது தோல்வியை சந்தித்த சென்னை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பிடித்துள்ளது.

- Advertisement -

ஆட்டநாயகன் ரோஹித்:

இந்த வெற்றிக்கு 76 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். சமீப காலங்களில் சுமாராக விளையாடியதால் விமர்சனங்கள் வந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் தெளிவான மனதுடன் விளையாடி அசத்தியதாக ரோஹித் கூறியுள்ளார். மேலும் தாம் குழந்தையாக வந்த வான்கடே மைதானத்தில் இன்று தமக்கு ஒரு பெயர் கிடைத்துள்ளது மிகப்பெரிய கௌரவம் என்றும் ரோஹித் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எனக்கு ஆதரவு கொடுத்த சில சென்னை ரசிகர்கள் கிரிக்கெட்டை விரும்பக் கூடியவர்கள். அதுவே வான்கடே மைதானத்தில் ஸ்பெஷல். கிரிக்கெட்டை அவர்கள் மகிழ்ச்சியுடன் பார்க்க விரும்புகின்றனர். இன்று எங்களுக்கு நல்ல போட்டியாக அமைந்தது. நீண்ட நாட்களாக அசத்தாமல் இருக்கும் போது உங்கள் மீது நீங்கள் சந்தேகப்படுவது எளிதானது”

- Advertisement -

மும்பையில் கெளரவம்:

“இருப்பினும் என்னைப் பொறுத்த வரை எளிமையான விஷயங்களை தெளிவான மனதுடன் செய்வது முக்கியம். எங்களுடைய திட்டத்துக்கு தகுந்தார் போல் எங்களது ஆட்டத்தை வெளிப்படுத்துவது முக்கியம். எனது வடிவத்தை பிடித்து கைகளை அகற்றி பந்து என்னுடைய இடத்தில் இருக்கும் போது அடிப்பது முக்கியம். கடைசி 2 – 3 ஓவர்களில் நான் இம்பேக்ட் வீரராக வருவது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது”

இதையும் படிங்க: ஓட்டைகளால் இது சரியாக அமையல.. 2020 மாதிரி 2025ம் கஷ்டம்.. அது முடியலன்னா 2026இல் கம்பேக் கொடுப்போம்.. தோனி பேட்டி

“எங்கள் அணி நேரடியாக என்னை பேட்டிங் செய்ய வருமாறு சொன்னாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டேன். என்னுடைய பெயரைக் கொண்ட ஸ்டேண்ட் தூரத்தில் இருக்கிறது. அங்கே பந்தை அடித்ததை விட களத்தில் இருந்து போட்டியை முடித்தது திருப்தியான விஷயமாகும். நாங்கள் சரியான நேரத்தில் 3 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று உச்சக்கட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறோம். வான்கடே மைதானத்தில் குழந்தையாக இருந்த இப்போது எனக்கு உள்ளே வர அனுமதி கிடைக்கவில்லை. பின்னர் வளர்ந்து அனைத்து கிரிக்கெட்டையும் அங்கே விளையாடி ஸ்டேண்ட்டில் ஒரு பெயரை பெற்றது மிகப்பெரிய கௌரவம்” என்று கூறினார்.

Advertisement