
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்று முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் சுமாராக விளையாடிய இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம் 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ள ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. முன்னதாக அந்தப் போட்டியில் பும்ரா, சிராஜுக்கு நிகராக ஹர்ஷித் ராணா நன்றாக பந்து வீசாதது தோல்விக்கு காரணமானது.
அதனால் முகமது ஷமி எப்போது விளையாடுவார் என்று ரசிகர்கள் மிகுந்த விரக்தியுடன் காத்திருக்கிறார்கள். ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் சந்தித்த காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் சமீபத்தில் குணமடைந்த ரஞ்சிக் கோப்பை, சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் விளையாடினார். இந்நிலையில் ஷமி 100% குணமடையாமல் மீண்டும் விளையாட விரும்பாததாலேயே ஆஸ்திரேலியா வருவதில் தாமதம் ஏற்படுவதாக கேப்டன் ரோஹித் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக இந்திய அணியில் அவருக்கான கதவுகள் திறந்திருக்கின்றன. ஆனால் நாங்கள் அவரை கண்காணித்து வருகிறோம். ஏனெனில் சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் முழங்காலில் மீண்டும் அவருக்கு சிறிது வீக்கம் ஏற்பட்டது. அதுதான் நான் இங்கே அவர் வந்து டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது”
“அவருடைய விஷயத்தில் நாங்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். அவர் 100% ஃபிட்டாக இருப்பதை நாங்கள் விரும்புகிறோம். கிரிக்கெட்டில் அவர் விளையாடி நீண்ட காலம் ஆகிவிட்டதால் உடனடியாக இங்கே வந்து இந்திய அணிக்காக விளையாட அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. அவரை இந்தியாவில் மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். அவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை வைத்து நாங்கள் முடிவு எடுப்போம்”
இதையும் படிங்க: அவங்களுக்கு சிராஜ் அசர மாட்டாரு.. இந்தியா – ஆஸின்னா சும்மாவா? ஹெட் மோதல் பற்றி ரோஹித்
“ஒவ்வொரு நாளும் அவர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள். தற்போது 20 ஓவர்கள் முழுமையாக விளையாடும் ஷமி 4 ஓவர்களை பந்து வீசுகிறார். எனவே இந்திய அணிக்கு எந்த நேரத்திலும் இங்கே வந்து அவர் விளையாட கதவுகள் திறந்திருக்கின்றன. ஆனால் நாங்கள் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்று கூறினார். இதை அடுத்து இந்த தொடரின் மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.