- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எங்களை மாதிரி இல்ல.. கில், பண்ட், ஜெய்ஸ்வாலுக்கு அதைப் பற்றி கவலையோ பயமோ இல்ல.. ரோஹித் பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெறும் தருவாயில் உள்ளார்கள். அவர்களுக்கு பதிலாக அடுத்த தலைமுறை வீரர்களும் தற்போதே அசத்துவதற்கு துவங்கியுள்ளார்கள். குறிப்பாக அபிஷேக் ஷர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட், திலக் வர்மா ஆகியோர் வருங்கால இந்திய பேட்டிங் துறையின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இப்போதே தங்களை அடையாளப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த தலைமுறை வீரர்களுக்கு தங்களைப் போல் அழுத்தத்தைப் பற்றி எந்த பயமும் கவலையும் இல்லை என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். மேலும் இப்போதுள்ள வீரர்கள் சதத்தைப் பற்றி கவலைப்படாமல் அணியின் வெற்றியை முதன்மையாக நினைப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார். சுப்மன் கில், யசஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகியோர் அந்த அணுகு முறையை கொண்டுள்ளதாக ரோகித் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அடுத்த தலைமுறை:

இது பற்றி அடிலெய்ட் டெஸ்ட் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “நம்முடைய அணிக்காக போட்டியை எப்படி வெல்லலாம் என்பதே அவர்களுடைய மனதில் ஒரே எண்ணமாக இருக்கிறது. அவர்கள் தங்களுடைய சதங்களைப் பற்றி சிந்திப்பதில்லை. அப்படி அணியை பற்றி சிந்திக்கும் போது உங்களுடைய சொந்த செயல்பாடுகளும் தாமாக வரும்”

“அணியை வெற்றி பெற வைப்பதில் கவனம் செலுத்தினால் தாமாக உங்களுக்கு பெரிய ஸ்கோர்கள் வரும். வெற்றி தான் முதன்மை கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை பேட்டிங்கில் இல்லை என்றாலும் அவர்கள் ஃபீல்டிங் அல்லது பந்து வீச்சில் வெற்றியில் பங்காற்ற விரும்புகிறார்கள். இதுவே இந்த தலைமுறையில் உள்ள வீரர்களின் இயற்கையான மனநிலை”

- Advertisement -

கில், ஜெய்ஸ்வால், பண்ட்:

“அவர்கள் பயமின்றி விளையாடுகிறார்கள். அதிக பொருட்களுடன் வெளிநாடுகளுக்கு வருவதில்லை. குறிப்பாக அழுத்தத்தை அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பண்ட் ஆகியோர் இந்த தலைமுறையைச் சேர்ந்த வித்தியாசமான வீரர்கள். களத்தில் நாங்கள் அழுத்தத்தை சந்திக்கும் போது எப்படி ரன்கள் குவிக்கப் போகிறோம் என்பதில் எங்களுடைய மனம் தடுமாறும்”

இதையும் படிங்க: ஸ்டார்க் மாதிரி.. என்னையும் ஜெய்ஸ்வால் இப்படி சொல்லி ஸ்லெட்ஜ் பண்ணாரு.. நேதன் லயன் பேட்டி

“அதனால் எங்கள் மீது நாங்கள் அழுத்தத்தை போட்டுக் கொள்வோம். ஆனால் ஒவ்வொரு தலைமுறை வீரர்களும் வித்தியாசமானவர்கள். இப்போதுள்ள பையன்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். அதை அவர்களிடம் பேசி கேட்கும் போது என்னால் புரிய முடிகிறது” என்று கூறினார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 1 – 0* (5) என்ற கணக்கை இந்தியா முன்னிலை வகிக்கிறது. இதை அடுத்து இரண்டாவது போட்டி நவம்பர் 6ஆம் தேதி அடிலெய்ட் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -