- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனி, கோலி மாதிரி இல்லனா தட்டுல வெச்சு தரமாட்டாங்க.. பும்ராவை தவிர யாரும் ரெடியாகல.. ரோஹித் பேட்டி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வெற்றி பெற்ற இந்தியா அடுத்த 3 போட்டிகளில் ரோஹித் சர்மா தலைமையில் 2 தோல்விகளை சந்தித்தது. அந்தத் தோல்விக்கு ரோகித் சர்மா முக்கிய காரணமாக அமைந்ததால் 5வது போட்டியில் தம்மைத்தாமே விலகிக் கொண்டார்.

அதனால் 37 வயதாகும் அவருடைய டெஸ்ட் கேரியர் முடிவுக்கு வந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் நலனுக்காக இந்த போட்டியில் மட்டுமே விலகியுள்ள தாம் ஓய்வு பெறவில்லை என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய அணியில் பும்ராவை தவிர வேறு வீரர்கள் அடுத்ததாக இந்திய அணியை தலைமை தாங்க தயாராக இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்திய கேப்டன்ஷிப்:

எனவே தற்போதைக்கு டெஸ்ட் கேப்டன்சிப் பதவியை தாம் ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் ரோகித் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அதைச் சொல்வது மிகவும் கடினம். இந்திய அணியில் நிறைய பையன்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் முதலில் கிரிக்கெட்டை தெரிந்து கொள்ள நான் விரும்புகிறேன். புதிய வீரர்களான அவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பது எனக்குத் தெரியும்”

“ஆனால் அதற்கு அவர்கள் தகுதியானவர்களாக வர வேண்டும். இன்னும் சில வருடங்கள் கடினமான கிரிக்கெட்டை விளையாடி தங்களது இடத்தை உருவாக்க வேண்டும். தற்போது நான் இங்கே இருக்கிறேன். பும்ரா இருக்கிறார். இதற்கு முன் விராட் கோலி, எம்எஸ் தோனி இருந்தார்கள். நாங்கள் அனைவரும் எங்களுக்கான இடத்தை சம்பாதித்தோம்”

- Advertisement -

தட்டில் கிடைக்காது:

“யாருக்கும் கேப்டன்ஷிப் பொறுப்பு தட்டில் வைத்து கிடைக்காது. யாரும் அதை அப்படி பெறவும் கூடாது. ஏனெனில் இந்திய அணியின் கேப்டனாக வருவது எளிதல்ல. அது மிகவும் அழுத்தமான கௌரவமான வேலை. நம்முடைய வரலாறு, நாம் கிரிக்கெட்டை விளையாடும் விதம் காரணமாக பொறுப்பை தோளின் இருபுறமும் வைத்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: மொத்த இந்தியாவையும் கொண்டாட வைத்த.. ரோஹித்தை இப்படி அவமானப்படுத்தலாமா? கம்பீரை விமர்சித்த ஃகைப்

“அடுத்த 5 – 6 மாதங்களில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது. தற்போதைய நிலையில் இந்த தொடரில் கவனம் செலுத்தி கோப்பையை நாங்கள் தக்க வைக்க வேண்டும். அதனாலேயே இது போன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பும்ரா நிறைய ஐடியாக்களுடன் விளையாடி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். 2013 முதல் 11 வருடங்களாக அவரை நான் பார்த்து வருகிறேன். தன்னைத்தானே மெருகேற்றியுள்ள அவரின் பவுலிங்கை மொத்த உலகமும் பார்க்கிறது. அவர் தன்னுடைய பலத்தால் அசத்துகிறார்”. என்று கூறினார்.

- Advertisement -