- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதை செய்ய முடியலன்னு நினைக்கிற நாளில்.. ஒன்டே கிரிக்கெட்டிலும் ஓய்வாகி போய்ருவேன்.. ரோஹித் உருக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே அவர் 2024 டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் ஓய்வு பெற்றது நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீப காலங்களாக தடுமாறிய அவர் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அதனால் ஏற்பட்ட விமர்சனங்களை தொடர்ந்து கடைசிப் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அதன் வாயிலாக இந்திய டெஸ்ட் அணியிலிருந்து தன்னைத்தானே நீக்கிக் கொண்ட முதல் கேப்டன் என்ற மோசமான சாதனையை ரோகித் படைத்தார்.

- Advertisement -

இதுவே போதும்:

அதே காரணத்தால் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடரிலும் அவரை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்தது. அதற்கு முன்பாக ரோஹித் சர்மா தாமாகவே மரியாதையுடன் ஓய்வு பெற்றார். இந்நிலையில் இப்போதெல்லாம் கிரிக்கெட்டில் பெரிய ரன்கள் அடிக்க வேண்டும் என்பதைத் தாண்டி வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அணுகுமுறையுடன் விளையாடுவதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

அந்த அணுகு முறையில் தம்மால் 30 ரன்கள் கூட அடிக்க முடியவில்லை என்று உணரும் நாளில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஓய்வு பெறுவேன் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆரம்பக் காலங்களில் நான் நேரம் எடுத்து விளையாடுவேன். அப்போதெல்லாம் முதல் 10 ஓவரில் 30 பந்துகளை எதிர்கொண்டு 10 ரன்கள் எடுத்தாலும் பரவாயில்லை என்ற வகையில் விளையாடுவேன்”

- Advertisement -

ஓய்வு பற்றி ரோஹித்:

“ஆனால் இப்போது 20 பந்துகளை எதிர்கொண்டால் என்னால் ஏன் 30, 35, 40 ரன்களை அடிக்க முடியாது. நன்றாக விளையாடும் நாட்களில் முதல் 10 ஓவர்களில் நான் 80 ரன்கள் அடிப்பது மோசமானது கிடையாது. இதைத்தான் நான் செய்து வருகிறேன். அந்த வழியில் எனக்கு கிடைக்கும் ரன்கள் போதுமானது. தற்போது நான் கிரிக்கெட்டை முற்றிலும் வித்தியாசமான வழியில் விளையாடுகிறேன்”

இதையும் படிங்க: அந்த தோல்விக்கான பழியை போட்டு ரோஹித், கோலியை ரிட்டையராக வெச்சுட்டீங்க.. கவாஸ்கர் அதிருப்தி

“எதையும் முழுமையாக கிடைத்ததாக நான் எடுத்துக் கொள்வதில்லை. அனைத்தும் ஒரே வழியில் செல்லும் என்று நான் கருதுவதில்லை. தொடர்ச்சியாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 20 – 30 ரன்களை அடிக்கும் வரை விளையாடுவேன். ஆனால் களத்தில் நான் விரும்பும் விஷயங்களை செய்ய முடியவில்லை என்ற உணர்வும் நாளில் விளையாடுவதை நிறுத்தி விடுவேன் என்பது உறுதி. தற்போது நிலைமை என்ன என்பது தெரியவில்லை. இப்போதும் விளையாடி என்னால் அணிக்கு உதவ முடிகிறது” என்று கூறினார்.

- Advertisement -