அது முடிஞ்சு போன கதை.. 2023 உ.கோ தொடரில்.. சிங்கிள் ரன் எடுக்கலைனா கூட நான் கவலைப்பட மாட்டேன்.. ரோஹித் ஓப்பன்டாக்

Rohit Sharma 2
- Advertisement -

வரும் அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் துவங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ள ஐசிசி 2023 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதே சமயம் சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தக்கூடிய இந்திய அணி 2011 போல சாம்பியன் பட்டம் வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் களமிறங்குகிறது.

இந்த தொடரில் வெற்றி பெற வேண்டுமெனில் பேட்டிங் துறையில் இரட்டை குழல் துப்பாக்கிகளான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்படுவது அவசியமாகும். அதில் விராட் கோலி பெரும்பாலான சமயங்களில் அழுத்தமான போட்டிகளில் கில்லியாக நின்று சொல்லி அடிக்கும் திறமை கொண்டவர் என்பதுடன் 2023 ஆசிய கோப்பையில் சதமடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

- Advertisement -

ரன்கள் முக்கியமல்ல:
மறுபுறம் அவருக்கு திறமையில் சற்றும் குறைவில்லாத ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்து இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற கடந்த உலக கோப்பையில் 5 சதங்கள் அடித்து மாபெரும் உலக சாதனை படைத்த பெருமைக்குரியவர். இருப்பினும் சமீப காலங்களாகவே சற்று தடுமாறி வந்த அவரும் 2023 ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் 2019 போல இம்முறை சொந்த மண்ணில் 5 சதங்களை அடிப்பாரா என்று ஹிட்மேன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் இம்முறை 0 ரன்கள் அடித்தால் கூட கவலைப்பட மாட்டேன் என்று தெரிவிக்கும் ரோகித் சர்மா கேப்டனாக கோப்பையை வெல்வதே முக்கியம் என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். ஏனெனில் தற்போது நான் நல்ல மன நிலையில் இருக்கிறேன். இது போன்ற சூழ்நிலையில் தான் 2019 உலகக்கோப்பை நடந்தது. அந்த வருடம் நான் நன்றாக பயிற்சி செய்தேன்”

- Advertisement -

“இந்த வருடமும் அதைத்தான் விரும்புகிறேன். ஆனால் மீண்டும் அது 2019 இது 2023. பொதுவாகவே கடந்த காலங்களில் நடந்ததை போல நிகழ்காலத்தில் நடப்பதை நாம் விரும்பும். ஆனால் அந்த தொடரில் நான் 5 சதங்கள் அடித்தும் நாங்கள் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தோம். எனவே உலகக் கோப்பை போல மீண்டும் இம்முறை அனைத்தும் விடக்கூடாது”

இதையும் படிங்க: ஐசிசி உலக கோப்பை 2023 : ரணதுங்காவின் 1996 மேஜிக் மீண்டும் அரங்கேறுமா.. இலங்கை அணியின் முழுமையான அலசல்

“குறிப்பாக இம்முறை நான் 1 அல்லது 2 சதங்கள் அல்லது சிங்கிள் ரன் அடிக்கவில்லை என்றாலும் அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை. மாறாக உலக கோப்பையை வெல்ல விரும்புகிறேன். மேலும் இத்தொடரில் யார் அதிக ரன்கள் அடிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை கோப்பையை வெல்வதே முக்கியம். ஒருவேளை நீங்கள் பெரிய ரன்கள் அடித்தும் கோப்பையை வெல்லாமல் போனால் அது பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும்” என்று கூறினார்.

Advertisement