IPL 2023 : இதுவே தோனியா இருந்தா ஆஹா ஓஹோன்னு பாராட்டிருப்பீங்க, நட்சத்திர வீரரின் கேப்டன்ஷிப்பை – ஆதங்கத்துடன் புகழ்ந்த கவாஸ்கர்

Sunil-Gavaskar
- Advertisement -

இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் ஆரம்பத்தில் தடுமாறியதால் லீக் சுற்றுடன் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் 2வது பகுதியில் பேட்டிங் துறையில் மிரட்டலாக செயல்பட்டு 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் மிரட்டிய அந்த அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று மே 26இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை எதிர்கொள்ள தகுதி பெற்றது.

Akash Madhwal

அந்த வகையில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் மும்பை கடந்த வருடம் புள்ளி பட்டியலில் வரலாற்றில் முதல் முறையாக கடைசி இடத்தை பிடித்து அவமானத்தை சந்தித்தாலும் அதிலிருந்து கொதித்தெழுந்து இம்முறை அபார கம்பேக் கொடுத்துள்ளது என்று சொல்லலாம். இந்த வெற்றிகளுக்கு ரோகித் சர்மா பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் கேப்டனாக பும்ரா, ஆர்ச்சர் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இருக்கும் இளம் வீரர்களை சரியாக பயன்படுத்தி மிகச் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார்.

- Advertisement -

தோனியா இருந்தால்:
குறிப்பாக பெங்களூரு அணியில் நெட் பவுலராக இருந்து கழற்றி விடப்பட்ட ஆகாஷ் மாத்வாலை இந்த சீசனில் ரோகித் சர்மா மிகச் சிறப்பாக பயன்படுத்துகிறார். அவரது ஆதரவால் எலிமினேட்டரில் வெறும் 5 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டிய ஆகாஷ் மாத்வால் குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் அப்போட்டியில் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரானை ரவுண்டு தி விக்கெட் திசையிலிருந்து வந்து அவுட்டாக்க உதவிய ரோகித் சர்மா அதற்கான பாராட்டுகளை பெறவில்லை என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

Akash Madhwal.jpeg

இதுவே தோனியாக இருந்தால் மாஸ்டர் கேப்டன்ஷிப் செய்தார் என்று அனைவரும் பாராட்டியிருப்பார்கள் என தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் பெரிதும் பாராட்டப்படுவதில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 கோப்பைகளை வென்றுள்ள அவருடைய கேப்டன்ஷிப் பற்றி சிறிய எடுத்துக்காட்டுடன் சொல்கிறேன். ஆயுஷ் படோனியை ஓவர் தி விக்கெட் திசையிலிருந்து அவுட்டாக்கிய ஆகாஷ் மாத்வால் ரவுண்டு தி விக்கெட் திசையிலிருந்து பந்து வீசி நிக்கோலஸ் பூரான் விக்கெட்டை எடுத்தார்”

- Advertisement -

“நிறைய பவுலர்கள் அவ்வாறு செய்வதற்கான அவசியமில்லை. ஏனெனில் ஓவர் தி விக்கெட் திசையில் நீங்கள் ஏற்கனவே விக்கெட்டை எடுத்து வெற்றிகரமாக செயல்பட்டால் எதிர்ப்புறம் இடது கை பேட்ஸ்மேன் இருந்தால் கூட அப்படியே தொடரலாம். ஆனால் அரௌண்ட் தி விக்கெட் திசையிலிருந்து சென்ற அவர் மிகச் சிறப்பான பந்தை வீசி அவுட்டாக்கினார். ஒருவேளை அந்த தருணம் சென்னை அணியில் தோனி தலைமையில் நடந்திருந்தால் அனைவரும் “நிக்கோலஸ் பூரானை திட்டம் போட்டு தோனி தான் அவுட்டாக்கினார்” என்று பாராட்டியிருப்பார்கள்”

Sunil Gavaskar

மகத்தானவர்கள் தலைமை தாங்கும் போது அது தான் நடைபெறும். அதாவது சிறிய எதிர்பார்ப்பு கூட சில நேரங்களில் அற்புதமாக வேலை செய்யும். அதே போல மற்றொரு எடுத்துக்காட்டாக நேஹல் வதேரா முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு இம்பேக்ட் வீரராக விளையாடி அதிரடியாக செயல்பட்டார். ஆனால் பொதுவாக பெரும்பாலான அணிகள் முதலில் பேட்டிங் செய்யும் போது பேட்ஸ்மேன்களை இம்பேக்ட் வீரராக பயன்படுத்துவதில்லை”

இதையும் படிங்க:ஒவ்வொரு மேட்ச்க்கு பிறகும் அவரு எனக்கு மெசேஜ் அனுப்புவாரு. முன்னாள் சி.எஸ்.கே வீரர் குறித்து – திலக் வர்மா கூறிய ரகசியம்

“இருப்பினும் லக்னோவுக்கு எதிராக மும்பை முதலில் பேட்டிங் செய்த போது வதேராவை இம்பேக்ட் வீரராக ரோகித் சர்மா பயன்படுத்தினார். எனவே அதற்கான பாராட்டுகளை ரோகித் சர்மாவுக்கு கொடுங்கள்” என்று கூறினார். அதை தொடர்ந்து இன்று நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் குஜராத்தை தோற்கடித்து ஃபைனலுக்கு செல்ல மும்பை போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement