ஒவ்வொரு மேட்ச்க்கு பிறகும் அவரு எனக்கு மெசேஜ் அனுப்புவாரு. முன்னாள் சி.எஸ்.கே வீரர் குறித்து – திலக் வர்மா கூறிய ரகசியம்

Tilak-Varma
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆண்டு நடைபெற்ற 15-ஆவது ஐ.பி.எல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிபட்டியலில் கடைசி இடத்தினை பிடித்து வெளியேறியிருந்தது. ஆனால் இந்த ஆண்டு மீண்டும் பலமாக திரும்பிய மும்பை அணி நடப்பு 16 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிபட்டியலில் 4 ஆவது இடத்தினை பிடித்து பிளே ஆப் வாய்ப்பினை உறுதி செய்து அசத்தியது.

Tilak Varma

- Advertisement -

மேலும் பிளே ஆப் சுற்றில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கும் முன்னேறியுள்ளனர். மேலும் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தினால் சி.எஸ்.கே அணிக்கெதிராக நடைபெறயிருக்கும் இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில் இப்படி இந்த ஆண்டு மும்பை அணி கொடுத்த பலமான கம்பேக்கிற்கு அந்த அணியை சேர்ந்த இளம்வீரர்களின் சிறப்பான ஆட்டமே காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த ஆண்டு மும்பை அணிக்காக திலக் வர்மா, வதேரா, ஆகாஷ் மத்வால் போன்ற இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை அணியின் வெற்றிக்கு உதவுகின்றனர்.

Tilak Varma and Raina

அதிலும் குறிப்பாக பேட்டிங் துறையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் திலக் வர்மா டாப் ஆர்டரில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று அதிரடியாக ரன்களை குவித்து வருகிறார். இந்த சீசனில் மட்டும் 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 300 ரன்களை குவித்துள்ளார். அவரது சிறப்பான ஆட்டத்தை கண்ட பலரும் திலக் வர்மா விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்ற வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் திலக் வர்மா சிறுவயதில் இருந்தே சுரேஷ் ரெய்னா போல விளையாட ஆசைப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் சிறுவயதில் இருந்தே சுரேஷ் ரெய்னா போல விளையாட ஆசைப்பட்டேன். மேலும் நான் அவரை முதல் முறையாக நேரில் சந்தித்தபோது என் கனவை பற்றியும் கூறினேன். அவரும் என்னிடம் நீண்ட நேரம் பேசி எனக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.

இதையும் படிங்க : பதிரானா பத்தி உங்களுக்கு எந்த கவலையும் வேணாம். நான் இருக்கேன் – பதிரானாவின் சகோதரிக்கு தோனி அளித்த வாக்குறுதி

ஆனால் இப்போது நான் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடி முடித்ததும் நேரடியாக மெசேஜ் செய்து என்னை பாராட்டுகிறார். அவர் எனக்கு அளிக்கும் இந்த ஆதரவு அபரிவிதமான ஒன்று என திலக் வர்மா நெகிழ்ச்சியுடன் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisement