விளம்பரமின்றி சுயநலமே இல்லாம உழைச்சு கேப்டனா வந்துருக்காரு.. கோலியை குத்திக்காட்டி ரோஹித்தை பாராட்டிய கம்பீர்

gautam Gambhir
- Advertisement -

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் அமைப்புடன் விளையாடி வரும் இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் 6 வெற்றிகள் பதிவு செய்து செமி ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. குறிப்பாக நேற்று லக்னோவில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தெறிக்க விட்ட இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 230 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 87, சூரியகுமார் யாதவ் 49 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

கம்பீரின் பாராட்டு:
அதை துரத்திய இங்கிலாந்து ஆரம்பம் முதலே சுமாராக விளையாடி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 34.5 ஓவரில் 129 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்து இத்தொடரிலிருந்து 99% வெளியேறியது. அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷமி 4, பும்ரா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்த வெற்றிக்கு கடினமான மைதானத்தில் 87 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் ரோகித் சர்மா நினைத்திருந்தால் இந்நேரம் ஒருநாள் கிரிக்கெட்டில் 40 – 45 சதங்கள் எக்ஸ்ட்ரா அடித்திருக்க முடியும் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆனால் அணியின் நலனுக்காக சுயநலமின்றி விளையாடும் ரோகித் சர்மா எவ்விதமான விளம்பரம் அல்லது மார்க்கெட்டிங் இல்லாமல் உழைத்து கேப்டனாக முன்னேறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதாவது சந்தடி சாக்கில் நியூசிலாந்து, வங்கதேச போட்டிகளில் சதத்திற்காக விளையாடிய விராட் கோலியை குத்திக்காட்டும் வகையில் அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பாராட்டி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோகித் சர்மா தற்போது 40 – 45 சதங்கள் அடித்திருக்க முடியும். ஆனால் அவர் சதத்திற்காக எப்போதும் விளையாடுவதில்லை. ஒரு சுயநலமற்ற கேப்டன் எப்போதுமே அணி வீரர்களிடமிருந்து எதிர்பார்ப்பதற்கு முன்பாக முதலில் தாம் சிறப்பாக செயல்படுவார். குறிப்பாக உங்களுடைய அணியிடமிருந்து நல்ல முடிவை எதிர்பார்த்தால் அதற்கு நீங்கள் கேப்டனாக அசத்த வேண்டும். அந்த வகையில் ரோகித் சர்மா அணிக்கு முன்னுதாரணமாக செயல்படுகிறார்”

இதையும் படிங்க: அகர்கரை முந்திய ஷமி.. இந்தியாவின் உ.கோ லெஜெண்ட்டாக மிட்சேல் ஸ்டார்க்கு நிகராக உலக சாதனை

“இதை உங்களுடைய மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரங்களால் செய்ய முடியாது. உங்களுடைய கடின உழைப்பால் நீங்கள் தான் செய்ய வேண்டும். இந்த உலகக் கோப்பையில் ரோகித் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 10 அல்லது 12வது இடத்தில் இருக்கலாம். ஆனால் நவம்பர் 19ஆம் தேதி கோப்பையை தூக்குவதே உங்களுடைய இலக்காக இருக்க வேண்டும். தற்போது போலவே அடுத்து வரும் போட்டிகளிலும் ரோஹித் சர்மா அசத்துவார் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement