தோனியையே மிஞ்சி நிறைவுக்கு வந்த சகாப்தம்.. ஐபிஎல் கேப்டனாக ரோஹித் சர்மாவின் சாதனைகள்

Rohit Sharma MI Captain
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் புதிய கேப்டனாக நியமித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த பாண்டியாவை டிரேடிங் முறையில் மும்பை அணி நிர்வாகம் 15 கோடி கொடுத்து வலுக்கட்டாயமாக வாங்கியது. அந்த நிலைமையில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோஹித் சர்மாவுக்கு பதிலாக 2024 முதல் ஹர்திக் பாண்டியா தங்களுடைய கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை நிர்வாகம் அறிவித்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்கள் கேப்டனாக செயல்பட்டும் 2012 வரை மும்பை அணியால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. அந்த நிலையில் 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா 2015, 2017, 2019, 2020 என அடுத்த 7 வருடத்திற்குள் 5 கோப்பைகளை வென்று கொடுத்து மும்பையை குறுகிய காலத்திலேயே வெற்றிகரமான ஐபிஎல் அணியாக ஜொலிக்க வைத்து சாதனை படைத்தார்.

- Advertisement -

முடிந்த சகாப்தம்:
அதன் காரணமாக இன்று இந்தியாவின் கேப்டனாகும் முன்னேறியுள்ள அவர் தற்போது பதவி விலகியுள்ளது மும்பை ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் 13 போட்டிகளிலேயே முதல் கோப்பையையும் 44 போட்டிகளில் 2வது கோப்பையையும் 75 போட்டிகளில் 3வது கோப்பையும் 104 போட்டிகளில் 4வது கோப்பையும் 116 போட்டிகளில் 5வது கோப்பையும் வென்றார்.

இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் முதல் 5 கோப்பைகளை மிகவும் குறைந்த போட்டிகளில் வென்ற கேப்டன் என்ற எவராலும் உடைக்க முடியாத சாதனை ரோகித் சர்மா படைத்துள்ளார். ஏனெனில் அவருக்கு அடுத்தபடியாக முதல் கோப்பையை வார்னர்/பாண்டியா தலா 15 போட்டிகளிலும் 2, 3, 4, 5வது கோப்பைகளை முறையே 59, 159, 204, 226 போட்டிகளில் வென்ற தோனி அடுத்த இடங்களில் உள்ளனர்.

- Advertisement -

மேலும் தோனி 16 வருடங்களில் வென்ற 5 கோப்பைகளை ரோகித் சர்மா 10 வருடங்களிலேயே வென்றார். அந்த வகையில் தோனியையே மிஞ்சிய ரோகித் சர்மா தலைமையில் 158 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய மும்பை 87 வெற்றிகளையும் 67 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. 4 போட்டி சமனில் முடிந்தது. வெற்றி சராசரி 55.06%. அதற்கிடையே 2014 சாம்பியன்ஸ் டி20 லீக் கோப்பையையும் அவர் மும்பைக்காக வென்று கொடுத்ததை மறக்கக்கூடாது. அதை விட 2008, 2012, 2014, 2019 போன்ற ஃபைனல்களில் கேப்டமாக தோனி தோல்வியை சந்தித்தார்.

இதையும் படிங்க: ரோஹித்துக்கு டாட்டா காட்டிய மும்பை.. பாண்டியாவை வைத்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பால்.. ரசிகர்கள் ஏமாற்றம்

ஆனால் 2013, 2015, 2017, 2019, 2020 என 5 ஃபைனல்களில் விளையாடி தோல்வியே சந்திக்காத ஒரே கேப்டனாக ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார். மேலும் விராட் கோலி (4994), தோனி (4660) இதற்குப் பின் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் (3986) அடித்த 3வது கேப்டன் என்ற பெருமையையும் ரோஹித் சர்மா கொண்டுள்ளார். அந்த வகையில் ரோஹித் சர்மா எனும் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனின் மாபெரும் சகாப்தம் 2013 – 2023 வரையிலான 10 வருடங்களுடன் நிறைவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement