சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதல் நபராக இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ள ரோஹித் சர்மா – என்ன தெரியுமா?

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மூன்றாம் நாளிலேயே ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 20-ஆம் தேதி டிரினிடாட் நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள் இந்திய அணி சார்பாக படைக்கப்பட்டன.

- Advertisement -

அதிலும் குறிப்பாக துவக்க வீரராக களமிறங்கி சதம் அடித்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால், இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 12 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் என தனித்தனியே அனைவரும் சாதனையை நிகழ்த்தி இருந்தனர். இந்நிலையில் அந்த போட்டியின் போது ரோகித் சர்மாவும் ஒரு இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அந்த விடயம் குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இந்த முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரரான ரோகித் சர்மா 10 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 103 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் அவர் அடித்த இந்த இரண்டு சிக்ஸர்கள் மூலம் தான் தற்போது இந்த சாதனையை படைத்துள்ளார். அந்த சாதனை யாதெனில் : சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற்ற போட்டிகளில் போட்டிகளில் மட்டும் 400 சிக்ஸர்கள் மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

இதையும் படிங்க : ஆஷஸ் 2023 : 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக – உலக சாதனை படைத்த ஸ்டுவர்ட் ப்ராட் (என்ன தெரியுமா?)

இதுவரை இந்திய அணி வெற்றி பெற்ற போட்டிகளில் மொத்தமாக அவர் 401 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்த பட்டியலில் அவருக்கு அடுத்து ஷாஹித் அப்ரிடி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற போட்டிகளில் 299 சிக்ஸர்களையும், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற போட்டிகளில் கிறிஸ் கெயில் 276 சிக்ஸர்களையும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement