எங்களுக்கு கடைசியா ஒரு சான்ஸ் இருக்கு.. அதுல சாதிப்போம்.. ரோஹித் சர்மா அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி

rohit sharma
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நிறைவு பெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா வென்றது. குறிப்பாக பெங்களூருவில் நடைபெற்ற கடைசி போட்டியில் இரட்டை சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து இந்தியா வென்றது ரசிகர்களுக்கு உச்சகட்ட திரில்லர் விருந்தாக அமைந்தது. அந்த போட்டியில் 22/4 என இந்திய தடுமாறிய போது ரிங்கு சிங்குடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா அதிரடியாக 129* ரன்கள் குவித்தார்.

அதை விட அழுத்தமான முதல் சூப்பர் ஓவரில் 13* ரன்கள் அடித்த அவர் 2வது சூப்பர் ஓவரில் 11* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார். அந்த வகையில் முதளிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட்டாகி கிண்டல்களுக்குள்ளான அவர் 3வது போட்டியில் சதமடித்து டி20 கிரிக்கெட்டில் இன்னும் தாம் சோடை போகவில்லை என்பதை நிரூபித்தார்.

- Advertisement -

ரோஹித்தின் ஹிண்ட்:
ஏனெனில் கடைசியாக 2022 டி20 உலகக்கோப்பைல் விளையாடியிருந்த அவரை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இம்முறை புதிய அணியை களமிறக்க பிசிசிஐ முடிவெடுத்ததாக செய்திகள் வெளியானது. அதனால் டி20 கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் தற்போது பாண்டியா காயமடைந்துள்ளதால் கேப்டனாக அணிக்கு திரும்பி இந்தியாவை வெற்றியும் பெற வைத்துள்ளார்.

இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் ஃபைனல் வரை சென்ற தோல்வியை சந்தித்தது இன்னும் மறக்க முடியவில்லை என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இருப்பினும் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்ல தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “50 ஓவர் உலகக்கோப்பை எனக்கு மிகப் பெரியதாகும்”

- Advertisement -

“அதற்காக டி20 உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று அர்த்தமல்ல. ஆனால் 50 ஓவர் உலகக் கோப்பையை பார்த்து தான் நாங்கள் வளர்ந்தோம். அது இந்தியாவில் நடந்தது ஸ்பெஷலாகும். மிகவும் பெரிய அந்த தொடரில் துரதிஷ்டவசமாக எங்களால் வெல்ல முடியவில்லை. அதற்காக ரசிகர்களும் சோகமடைந்திருப்பார்கள்”

இதையும் படிங்க: இங்கிலாந்து டெஸ்ட்ல நீங்க ஆட வேண்டாம்.. உடனடியா லண்டன் கிளம்புங்க – முகமது ஷமிக்கு பி.சி.சி.ஐ உத்தரவு

“ஆனால் தற்போது எங்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்தி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் நாங்கள் தற்போது கவனம் செலுத்துகிறோம்” என்று ஸ்போர்ட்ஸ்18 தொலைக்காட்சியில் பேசினார். அதாவது 2024 டி20 உலகக் கோப்பையில் மீண்டும் விளையாடுவேன் என்று ரோகித் சர்மா மறைமுகமாக தெரிவித்துள்ளார். அவர் விளையாடினால் தாமாகவே விராட் கோலியின் விளையாடுவார். அதனால் ரோகித் சர்மாவின் இந்த கருத்து ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைப்பதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement