- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சொன்னா நம்ப மாட்டீங்க.. அந்த பிரச்சனையை மறைக்கவே ரோஹித் அதிரடியா ஆடுறாரு.. பசித் அலி கருத்து

இலங்கைக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 27 வருடங்களாக இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் தோற்காமல் அசத்தி வந்த இந்தியாவின் வெற்றி நடை முடிவுக்கு வந்துள்ளது. இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது.

குறிப்பாக 3 போட்டிகளிலுமே கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் விராட் கோலி உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவருமே பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். அதனால் 2014க்குப்பின் 10 வருடங்கள் கழித்து இலங்கைக்கு எதிராக அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

சீனியர்களின் நிலை:
இந்நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவிடம் ஃபிட்னஸ் பிரச்சனை இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார். அதை மறைப்பதற்காகவே ரோஹித் மிகவும் வேகமாக ரன்கள் குவிக்க முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார். எனவே ரோஹித் சர்மா நின்று நீண்ட நேரம் பேட்டிங் செய்திருந்தால் இந்தியா வென்றிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே போல விராட் கோலி இவ்வளவு அனுபவத்தை கொண்டிருந்தும் தொடர்ந்து 3 போட்டிகளில் ஸ்பின்னர்களிடம் அவுட்டானது ஏமாற்றத்தைக் கொடுப்பதாகவும் பசித் அலி விமர்சித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மாவிடம் ஃபிட்னஸ் பிரச்சனை இருக்கிறது. இதை சொல்லும் என்னை யாரும் நம்ப மாட்டார்கள். அதனாலேயே அவர் வேகமாக ரன்கள் குவிக்க விரும்புகிறார்”

- Advertisement -

“இலங்கை சூழ்நிலையில் 50 ஓவர்கள் ஃபீல்டிங் செய்வது மிகப்பெரிய சோர்வை ஏற்படுத்தும் என்பது அங்கே விளையாடிய எனக்கும் தெரியும். அங்கே ஃபீல்டிங் செய்வது விட்டு நீங்கள் பேட்டிங் செய்ய வரும் போது பிரச்சனை ஏற்படும். ஆனால் நீங்கள் நல்ல ஃபார்மில் இருக்கும் போது நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டும். இருப்பினும் அதை 3 போட்டிகளிலும் செய்யாத ரோஹித் சர்மா அவுட்டானதும் இந்திய பேட்டிங் சரிந்தது”

இதையும் படிங்க: 3க்கு 0.. பேட்ஸ்மேன்களை மட்டும் குறை சொல்லக்கூடாது.. தோல்விக்கு பவுலர்களும் காரணம்.. ஆகாஷ் சோப்ரா அதிருப்தி

“அதே போல விராட் கோலியும் இன்று 20 ரன்கள் அடித்தார். ஆனால் அந்த ரன்களால் அணிக்கு என்ன பயன்? விராட் கோலி இப்படி ஸ்பின்னர்களுக்கு எதிராக 3 போட்டிகளிலும் அவுட்டாவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்ளவில்லை. இது போன்ற ஆடுகளங்களில் ஸ்வீப் ஷாட்டுகள அடித்து வெற்றி பெற வைக்க சூரியகுமார் யாதவும் அணியில் இல்லை. இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியின் பேட்டிங் சுமாராக இருந்தது” என்று கூறினார்.

- Advertisement -