7 ஆவது இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் நிகழ்த்த இருக்கும் சாதனை – அசத்தல் விவரம் இதோ

Rohit
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து என ஐந்து அணிகளையும் வீழ்த்தி 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.

அதோடு இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்காத அணி என்கிற சிறப்பான நிலையிலும் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி தங்களது ஆறாவது லீக் ஆட்டத்தில் இன்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

அதன்படி அக்டோபர் 29-ஆம் தேதி இன்று நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்புடன் இந்திய அணியும், ஏற்கனவே 5 போட்டிகளில் ஒரே வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதால் இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி சற்று கௌரவமான இரண்டாவது வெற்றிக்காகவும் இங்கிலாந்து அணி காத்திருப்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணிக்காக ஏற்கனவே ஆறு வீரர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள வேளையில் தற்போது ஏழாவது இந்திய கேப்டனாக இன்று ரோகித் சர்மா தனது நூறாவது போட்டியில் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இதற்கு முன்னதாக தோனி 332 போட்டியிலும், அசாருதீன் 221 போட்டிகளிலும், விராட் கோலி 213 போட்டியிலும், கங்குலி 196 போட்டிகளிலும், கபில்தேவ் 108 போட்டிகளிலும், ராகுல் டிராவிட் 104 போட்டிகளிலும் கேப்டனாக விளையாடியுள்ளனர்.

இதையும் படிங்க : லக்னோவில் நிலைமை மாறிடுச்சு.. இங்கிலாந்து மேட்ச்ல அஷ்வினை எடுத்துடாதீங்க.. இந்தியாவை எச்சரித்த ஆகாஷ் சோப்ரா

இந்த ஆறு வீரர்களுக்கு அடுத்து இன்று தனது நூறாவது போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் துணை கேப்டாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா 2021-ஆம் ஆண்டு விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதன் பின்னர் தொடர்ச்சியாக கேப்டனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement