- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பயிற்சி போட்டியில் தாராள மனதை காட்டிய ரோஹித் சர்மா.. பிங்க் பால் டெஸ்டிலும் அது நடந்தா – நல்லா இருக்கும்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா தனது இரண்டாவது குழந்தை பிறப்பிற்க்காக இந்தியாவிலேயே தங்கி விட்டதால் அவரால் அந்த போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. அதன் காரணமாக பும்ரா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை மிகச்சிறப்பாக கையாண்டு 295 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாதமான வெற்றியை ருசித்து இருந்தது.

தனது இடத்தினை விட்டுக்கொடுத்த ரோஹித் சர்மா :

இப்படி ரோகித் சர்மா இந்த முதல் போட்டியில் விளையாட முடியாமல் போனதன் காரணமாக அவரது துவக்க வீரருக்கான இடத்தில் கே.எல் ராகுல் களமிறங்கி இருந்தார். இப்படி துவக்க வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து களமிறங்கினார். அப்படி களமிறங்கிய கே.எல் ராகுல் முதல் இன்னிங்சிலும் சரி, இரண்டாவது இன்னிங்சிலும் சரி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

அதோடு இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்த வேளையில் இரண்டாவது இன்னிங்ஸின் போது ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரது ஜோடி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியிருந்தது. இதன் காரணமாகவே இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

அதன்காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவர்களே துவக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் என்ற கருத்துக்கள் பரவலாக இருந்து வந்தன. ஆனாலும் ரோகித் சர்மா தனது துவக்க வீரருக்கான இடத்தினை விட்டுக் கொடுக்க மாட்டார் என்பதால் மீண்டும் கே.எல் ராகுல் ஆறாவது இடத்திற்கு தள்ளப்படுவார் என்று தெரிந்தது.

- Advertisement -

ஆனால் தற்போது ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடந்த பயிற்சி போட்டியில் விளையாடிய இந்திய அணியில் தனது துவக்க வீரருக்கான இடத்தினை ரோகித் சர்மா கே.எல் ராகுலுக்கு வழங்கி இருந்தார்.

இதையும் படிங்க : பிரைம்மினிஸ்டர் அணிக்கெதிரான பயிற்சி போட்டியை தவிர்த்த விராட் கோலி – கையில் எடுத்த யுக்தி

இப்படி பிரைம் மினிஸ்டர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ரோகித் சர்மா தனது இடத்தை விட்டுக் கொடுத்து நான்காவது வீரராக களமிறங்கிய வேளையில் அதேபோன்று இரண்டாவது பிங்க் பால் டெஸ்டிலும் ரோகித் சர்மா இந்த முடிவை எடுத்தால் அது இந்திய அணிக்கு மிகச் சிறப்பான ஒன்றாக இருக்கும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.

- Advertisement -