IND vs ENG : சொன்ன வார்த்தையை காப்பாற்றிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா – ஆனா கடைசில இப்படி ஆயிடுச்சே

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது t20 போட்டி நாட்டிங்காம் நகரில் நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்ற வேளையில் இறுதியாக நடைபெற்ற கடைசி போட்டியில் முதலாவதாக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடிய இங்கிலாந்து அணியானது 20 ஓவர்களின் முடிவில் 215 ரன்கள் குவித்தது.

IND vs ENg Rohit Sharma Jos Buttler

- Advertisement -

பின்னர் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்தி விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்ததால் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி சற்று வருத்தத்தை தந்தாலும் மிகப் பெரிய இலக்கினை துரத்திச் சென்று குறுகிய இடைவெளியிலேயே கைவிட்டதால் இந்திய அணியின் இந்தப் போராட்டத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டரில் நான்காவது வீரராக களம் இறங்க சூரியகுமார் யாதவ் 117 ரன்கள் அடித்து தனி ஒருவனாக இந்திய அணிக்காக தனது போராட்டத்தை வழங்கினார். அவரது இந்த சிறப்பான ஆட்டமும் தற்போது பாராட்டுகளை குவித்து வருகிறது.

Hardik Pandya Bowling

இந்நிலையில் கடந்த போட்டியின் போது கேப்டன் ரோகித் சர்மா அளித்த வாக்குறுதியை இந்த போட்டியில் அவர் காப்பாற்றியுள்ளது பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. ஏனெனில் இரண்டாவது போட்டியின் பரிசளிப்பு விழாவின் போது நாங்கள் தொடரை கைப்பற்றிய விட்டதால் மூன்றாவது போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க நினைக்கிறோம். அது குறித்து டிராவிடிடம் பேசுவேன் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் அவர் கூறியபடியே இந்த இறுதி போட்டிக்கான இந்திய அணியில் நான்கு சீனியர் வீரர்களாக ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார் மற்றும் சாஹல் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர், உம்ரான் மாலிக், ஆவேஷ் கான் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : ஹேப்பி பர்த்டே கவாஸ்கர், கிரிக்கெட்டின் முதல் மாஸ்டர் ப்ளாஸ்டராக இன்றும் படைத்துள்ள சாதனைகளின் பட்டியல்

கடந்த போட்டியில் சொன்னதை இந்த போட்டியில் ரோஹித் செய்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றுதான். அதேபோன்று வழக்கம்போலவே இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 6 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்ஸ் என 11 ரன்களில் வெகு விரைவாக வெளியேதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement