ஹேப்பி பர்த்டே கவாஸ்கர், கிரிக்கெட்டின் முதல் மாஸ்டர் ப்ளாஸ்டராக இன்றும் படைத்துள்ள சாதனைகளின் பட்டியல்

Sunil Gavaskar
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஜூலை 10-ஆம் தேதியான இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மும்பையில் பிறந்த இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டதால் இந்தியாவுக்காக 1971இல் அறிமுகமாகி தனது அற்புதமான பேட்டிங் திறமையால் அந்த சமயத்தில் இருந்த அத்தனை உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் அபாரமாக எதிர்கொண்டு 80களில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார். 1983 உலகக்கோப்பையை வென்ற அவர் உலகிலேயே 10000 என்ற மாபெரும் மைல்கல் ரன்களை தொட்ட முதல் பேட்ஸ்மேன் என்ற மகத்தான உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.

gavaskar 2

- Advertisement -

இந்தியாவின் கேப்டனாகவும் செயல்பட்ட அவர் மொத்தம் 125 டெஸ்ட் போட்டிகளில் 10,122 ரன்களையும் 108 ஒருநாள் போட்டிகளில் 3092 ரன்களை 348 முதல் தரப்போட்டிகளில் 25,834 ரன்களையும் குவித்து உலகின் முதல் ரன் மெஷின் பேட்ஸ்மேனாக தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர். அவரை ரோல் மாடலாக கொண்டு வளர்ந்த சச்சின் டெண்டுல்கர் அவருக்குப் பின் வந்து அவரை விட இருமடங்கு அபாரமாக செயல்பட்டு அவரின் சாதனைகளை எல்லாம் உடைத்ததால் மாஸ்டர் ப்ளாஸ்டர் என்று போற்றப்படுகிறார்.

ஆனால் 70 மற்றும் 80களில் உலகையே தங்களது அதிரடியான ஆட்டத்தால் மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த 1971இல் அறிமுகமாகி கொஞ்சம் தவறினால் மண்டையை உடைத்து சோலியை மைக்கேல் ஹோல்ட்டிங், ஆண்டி ராபர்ட்ஸ், மால்கம் மார்சல் போன்ற வெறித்தனமான பவுலர்களை ஆரம்ப காலத்திலேயே அதுவும் ஹெல்மெட் போடாமல் அற்புதமாக எதிர்கொண்ட சுனில் கவாஸ்கர் கிரிக்கெட்டின் உண்மையான முதல் மாஸ்டர் ப்ளாஸ்டர் என்றே கூறலாம்.

Gavaskar

மாஸ்டர் ப்ளாஸ்டர்:
1987இல் ஓய்வு பெற்ற அவர் அதன்பின் வர்ணனையாளராக அவதாரம் எடுத்து இன்று வரை ரசிகர்கள் மனம் கவர்ந்த வெற்றிகரமான வர்ணனையாளராக 2-வது இன்னிங்சிலும் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு சச்சின் டெண்டுல்கர் உட்பட பல முன்னாள் வீரர்களும் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் இன்றும் நின்று பேசும் அவரின் சில சாதனைகளைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. கடந்த 1971இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அறிமுகமான அவர் 774 ரன்களை 154.80 என்ற அபாரமான சராசரியில் குவித்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக தொடரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை இன்றுவரை படைத்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தொடரில் 4 சதங்கள் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்த அவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முதல் வெற்றியையும் முதல் டெஸ்ட் தொடரையும் இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினார்.

gavaskar 1

2. அதேபோல் அந்த காலத்து வெறித்தனமான வெஸ்ட் இண்டீசை அப்போதே புரட்டி எடுத்த அவர் அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிராக அதிக சதங்கள் (13) அதிக ரன்கள் (2749) அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை இன்றும் தன் வசம் வைத்துள்ளார்.

- Advertisement -

3. 1987இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த அவர் 34 சதங்களுடன் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையும் படைத்திருந்தார். அதை நாளடைவில் கடந்த 2005இல் சச்சின் டெண்டுல்கர் முறியடித்தார்.

gavaskar

4. வரலாற்றின் மிகச்சிறந்த தொடக்க வீரர்களில் முக்கியவராக போற்றப்படும் இவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற வரலாற்றையும் படைத்துள்ளார். கடந்த 1982இல் பாகிஸ்தானுக்கு எதிராக பைசலாபாத் நகரில் நடந்த டெஸ்டில் தொடக்க வீரராக களமிறங்கிய அவர் கடைசி வரை அவுட்டாகாமல் 127* ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

5. அதேபோல் ஒரு காலண்டர் வருடத்தில் 4 முறை 1000க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த ஒரே பேட்ஸ்மேனாக இன்றும் சுனில் கவாஸ்கர் சாதனை படைத்துள்ளார்.

Gavaskar

6. டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு மைதானங்களில் 4 சதங்களை தொடர்ச்சியாக அடித்த ஒரே பேட்ஸ்மேன் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார். போர்ட் ஆஃப் ஸ்பைன் மற்றும் வான்கடே என 2 கிரிக்கெட் மைதானங்களில் தலா 4 சதங்களை தொடர்ச்சியாக அடித்துள்ள அவர் இந்த மகத்தான சாதனை படைத்துள்ளார்.

7. அதேபோல் மிகச்சிறந்த பீல்டரான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 கேட்ச்களை பிடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மொத்தமாக அவர் 108 கேட்ச்களை பிடித்துள்ளார்.

gavaskar

8. மேலும் உலகிலேயே அதிகபட்சமாக 18 வெவ்வேறு வீரர்களுடன் 100 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த ஒரே பேட்ஸ்மேனாக இன்றும் அவர் சாதனை படைத்துள்ளார்.

9. 1980இல் விஸ்டன் பத்திரிக்கையால் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக அங்கீகரிக்கப்பட்ட இவர் 2009இல் ஐசிசி ஹால் ஃபேம் கௌரவத்தையும் பெற்றுள்ளார். அதேபோல் அர்ஜூனா மற்றும் பத்ம பூசன் போன்ற இந்திய அரசின் விருதுகளையும் வென்றுள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலியின் மீது என்ன தவறு? நான் இதை ஏத்துக்க முடியாது – கபில் தேவுக்கு பதிலடி கொடுத்த கோலியின் கோச்

10. இந்த மகத்தான வீரரை மேலும் கவுரவப்படுத்தும் வகையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் அனைத்து டெஸ்ட் தொடர்களும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

Advertisement