- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வலைப்பயிற்சியின் போது காயத்தை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா – என்ன நடந்தது?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற இரண்டு கணக்கில் சமநிலை வகிக்கின்றனர்.

காயத்தை சந்தித்த ரோஹித் சர்மா :

அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 26-ஆம் தேதி மெல்போர்ன் நகரில் “பாக்சிங் டே” போட்டியாக நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக தற்போது இந்திய அணி மெல்போர்ன் நகருக்கு சென்றடைந்து தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் நடைபெற்று வரும் இந்த பயிற்சியில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயத்தை சந்தித்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே கே.எல் ராகுல், ஆகாஷ் தீப் ஆகியோர் வலைப்பயிற்சியின் போது காயத்தை சந்தித்திருந்தனர்.

இவ்வேளையில் தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து தாக்கியதால் காயத்தை சந்தித்துள்ளார். வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த அவரது காலில் பந்து படவே வலியால் துடித்த அவருக்கு பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை அளித்தார்.

- Advertisement -

இதன் காரணமாக ரோஹித் சர்மா அடுத்த போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் நிச்சயம் ரோஹித் சர்மா அடுத்த போட்டியில் விளையாடி தன்னுடைய பார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : அஸ்வின் இடத்தில் மும்பை வீரரை சேர்த்த பிசிசிஐ.. அவருடைய செயல்பாடு எப்படி? அப்போ சுந்தரின் நிலைமை?

ஏனெனில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த நியூசிலாந்து தொடரிலும் சரி, தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா தொடரிலும் பேட்டிங்கில் தடுமாற்றத்தை சந்தித்து வரும் அவர் பெரியளவு ரன்களை குவிக்காததால் நிச்சயம் இனி வரும் போட்டிகள் அவருக்கு மிக முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -