தோல்விக்கு அபராதம், அதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என ரோஹித்தை கலாய்க்கும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

Rohit Sharma Rishabh Pant
- Advertisement -

மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மும்பையில் மிகவும் விறுவிறுப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. இந்தத் தொடரின் 2-வது நாளில் 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மதியம் 3.30 மணிக்கு மும்பையில் இருக்கும் ப்ராபோர்ன் மைதானத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

DC vs MI

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 177/5 ரன்களை சேர்த்தது என்றே கூறலாம். ஏனெனில் அந்த அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா 41 (32) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த அன்மொல்பிரீட் சிங் 8 ரன்களிலும் திலக் வர்மா 22 ரன்களிலும் அவுட் ஆனார்கள். இதனால் 117/3 என தடுமாறிய மும்பை அணிக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கைரன் பொல்லார்ட் 3, டிம் டேவிட் 12 என முக்கியமான வெளிநாட்டு வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.

இஷான் கிசான் மிரட்டல்:
ஆனால் மறுபுறம் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிசான் தொடர்ந்து டெல்லி அணியின் பந்து வீச்சாளர்களை ஆரம்ப முதலே நிதானமாக எதிர்கொண்டு வந்தார். அதை அப்படியே தொடர்ந்த அவர் கடைசி வரை அவுட்டாகாமல் நங்கூரம் போல் நின்று டெல்லி பந்துவீச்சாளர்களை சரமாரியாக அடித்து 48 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 81* ரன்கள் விளாசி தடுமாறிய மும்பையை தூக்கி நிறுத்தினார். டெல்லி சார்பில் பந்துவீச்சில் அசத்திய குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

MI V DC IPL 2022

இதை அடுத்து 178 என்ற இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு பிரிதிவி ஷா 38 (24) ரன்களும் டிம் சைபர்ட் 21 (14) ரன்களும் எடுத்த நிலையில் அவுட்டாகி ஓரளவு சுமாரான தொடக்கத்தை கொடுத்தனர். அடுத்து களமிறங்கிய மந்தீப் சிங் டக் அவுட், ரிஷப் பண்ட் 1, ரோவ்மன் போவெல் டக் அவுட் என முக்கியமான 3 மிடில் ஆர்டர் வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 72/5 என தடுமாறிய டெல்லியின் தோல்வி உறுதியென அனைவரும் நினைத்தார்கள். அந்த சமயத்தில் களமிறங்கிய ஷர்துல் தாகூர் 4 பவுண்டரிகளை அடித்து 22 (11) ரன்களில் ஆட்டமிழந்தபோது 104/6 என மீண்டும் டெல்லி தடுமாறியதால் மும்பை உறுதியாக வெற்றி பெற்றுவிடும் என்ற நிலைமை ஏற்பட்டது.

- Advertisement -

டெல்லி த்ரில் வெற்றி:
அப்போது ஜோடி சேர்ந்த லலித் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் யாருமே எதிர்பாராத வண்ணம் மும்பை பந்துவீச்சாளர்களை சரமாரியாக அடித்தனர். களமிறங்கிய அடுத்த 5 ஓவர்களில் மும்பையை புரட்டி எடுத்த இந்த ஜோடி 6 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்களை அடித்து 75* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதனால் மும்பை பக்கம் சென்று கொண்டிருந்த போட்டி அப்படியே தலைகீழாக திரும்பி டெல்லி பக்கம் மாறியதால் 18.2 ஓவர்களில் 179/6 ரன்களை எடுத்த டெல்லி கேப்பிடல்ஸ் வெறும் 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

MI vs DC IPL 2022

இந்த வெற்றிக்கு 3 முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து வித்திட்ட குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியால் முதல் போட்டியிலேயே 2 புள்ளிகளை பெற்ற டெல்லி ஐபிஎல் 2022 தொடரை வெற்றியுடன் தொடங்கியது. மறுபுறம் கையிலிருந்த எளிதான வெற்றியை டெல்லியிடம் கோட்டைவிட்டு பரிசளித்த மும்பை இந்தியன்ஸ் சொந்த மண்ணில் மண்ணை கவ்வி அதிர்ச்சி நிறைந்த பரிதாப தோல்வியடைந்தது.

கலாய்க்கும் ரசிகர்கள் – 12 லட்சம் அபராதம்:
இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் வாயிலாக தொடர்ந்து 10-வது முறையாக ஐபிஎல் தொடரின் தனது முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பரிதாப தோல்வி அடைந்தது. அதாவது கடைசியாக கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது. அதன்பின் 2013 முதல் 2022 வரை தொடர்ந்து 10 வருடங்களாக ஐபிஎல் தொடரில் தனது முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கிய 10 ஓப்பனிங் போட்டிகளிலும் 10 தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவெனில் இந்த 10 தொடர் தோல்விகளுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்து வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா தலைமையில் வந்ததாகும். கடைசியாக 2012-ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை வெற்றி பெற்ற போது அந்த அணியின் கேப்டனாக ஹர்பஜன்சிங் செயல்பட்டார்.

rohith 1

இதை அறிந்த எதிரணியின் ரசிகர்கள் என்னதான் ரோகித் சர்மா 5 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன் என சாதனை படைத்திருந்தாலும் ஐபிஎல் தொடரின் ஓபனிங் போட்டியில் வெற்றியை சுவைப்பதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள். இதற்கிடையில் டெல்லி அணிக்கு எதிரான இந்த முதல் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தொடரில் இனி வரும் போட்டிகளில் இது போன்றதொரு தவறை செய்யும் பட்சத்தில் ஒரு போட்டிக்கு தடை அல்லது அணியின் வெற்றி புள்ளியில் 1 கழித்தல் என்பது போன்ற தண்டனைகள் அளிக்கப்படலாம் எனவும் ரோகித் சர்மா எச்சரிக்கை பட்டுள்ளார். முதல் போட்டியிலேயே படுதோல்வியை சந்தித்து பின்னடைவை சந்தித்த ரோகித் சர்மாவுக்கு இது மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement