46 ரன்ஸ் லீடிங்.. இங்கிலாந்தை சவால் விடும் கில்.. சச்சினின் சாதனையை சமன் செய்த ஹிட்மேன் ரோஹித்

- Advertisement -

தரம்சாலாவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 5வது டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் தேதி துவங்கியது. அதில் ஏற்கனவே தொடரை இழந்த இங்கிலாந்து வெற்றி பெறும் எண்ணத்துடன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதற்கு தகுந்தார் போல் விளையாடத் தவறிய அந்த அணி வெறும் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

குறிப்பாக ஜாக் கிராவ்லி அதிகபட்சமாக 79 ரன்கள் அடித்து அசத்தியதால் 100/1 என்ற வலுவான நிலையில் இங்கிலாந்து இருந்தது. ஆனால் அதன்பின் அபாரமாக பந்து வீசி அந்த அணியை ஆல் அவுட் செய்த இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மீண்டும் இங்கிலாந்து பவுலர்களை சிறப்பாக எதிர் கொண்டு அதிரடியாக ரன்கள் சேர்த்தார்.

- Advertisement -

ரோஹித் சாதனை:
அந்த வகையில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் சேர்ந்து 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த அவர் 5 பவுண்டரை 3 சிக்சருடன் அரை சதமடித்து 57 (58) ரன்களில் ஆட்டமிழந்தார். அதே போல மறுபுறம் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்த ரோகித் சர்மாவுடன் அடுத்ததாக வந்த சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். அதில் நேரம் செல்ல செல்ல கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா சதத்தை நெருங்கினார்.

அவருக்கு ஈடு கொடுத்து மறுபுறம் விளையாடிய சுப்மன் கில்லும் அரை சதமடித்து அசத்தலாக பேட்டிங் செய்தார். குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக அசால்டாக இறங்கி வந்த சிகாரை பறக்க விட்ட அவரும் சதத்தை நெருங்கினார். இறுதியில் இந்த ஜோடியில் கேப்டன் ரோகித் சர்மா முதலாவதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 12வது சதத்தை அடித்தார்.

- Advertisement -

இந்த அதைத்தையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் 30 வயதை கடந்த பின் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்தார். இதற்கு முன் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் 30 வயதை கடந்த பின் அதிகபட்சமாக 35 சதங்கள் அடித்திருந்தார். உலக அளவில் குமார் சங்ககாரா (43) மேத்யூ ஹெய்டன் (36) ரிக்கி பாண்டிங் (36) ஆகியோர் இந்த பட்டியலில் டாப் 3 இடங்களில் உள்ளனர்.

இதையும் படிங்க: அஸ்வினின் 100வது போட்டியில் கவாஸ்கருக்கு கேக் வெட்டி.. வாழ்த்து சொல்லி கொண்டாடிய பிசிசிஐ.. காரணம் என்ன?

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்த ஓவரிலேயே சுப்மன் கில் தன்னுடைய 4வது பெஸ்ட் சதத்தை அடித்து அசத்தினார். அந்த வகையில் ரோகித் சர்மா – கில் 160* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஜோடி சேர்ந்து இங்கிலாந்துக்கு சவால் கொடுத்து வருகின்றனர். அதனால் இரண்டாவது நாள் உணவு இடைவேளையில் 264/1 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி இங்கிலாந்தை விட 46 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.

Advertisement