134 இன்னிங்ஸ்களுக்கு முன்னதாகவே ரிக்கி பாண்டிங்கின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்த – ரோஹித் சர்மா

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது ஜனவரி 24-ஆம் தேதி இந்தூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரது அதிரடி துவக்கம் காரணமாக முதல் விக்கெட்டிற்கு 212 ரன்கள் சேர்த்து பிரம்மாண்டமான அடித்தளத்தை அமைத்தது.

Suryakumar rohit sharma

- Advertisement -

அதன் பிறகு அவர்களது அதிரடியை அப்படியே தொடர்ந்த இந்திய வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் குவித்தனர். இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சினை இந்திய வீரர்கள் சிதறடித்தது மைதானத்தில் இருந்த ரசிகர்களை மிகவும் பரவசப்படுத்தினர்.

பின்னர் 386 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்களை மட்டுமே குவித்ததால் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Rohit Sharma 1

இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் துவக்க வீரர்களான சுப்மன் கில் 112 ரன்கள், ரோகித் சர்மா 101 ரன்கள் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியில் சதம் அடித்த ரோகித் சர்மா கடந்த 2020-ஆம் ஆண்டு அடித்த சதத்திற்கு பிறகு 1101 நாள்களுக்கு கடந்து தற்போது சதம் அடித்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

இந்த சதத்தின் மூலம் அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்திலிருந்த ரிக்கி பாண்டிங்கின் சாதனையை ரோஹித் சமன் செய்துள்ளார். ரிக்கி பாண்டிங் 365 இன்னிங்ஸ்களில் 30 சதங்களை அடித்திருந்தார்.

இதையும் படிங்க : விராட், ரோஹித் இல்லை – 2 இந்திய வீரர்களுக்கு இடம், ஐசிசி வெளியிட்ட 2022ஆம் ஆண்டின் சிறந்த கனவு ஒருநாள் அணி இதோ

அதேவேளையில் ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை ரோகித் சர்மா தனது 234 ஆவது இன்னிங்ஸ்லேயே முப்பது (30) சதங்களை அடித்து அவரது சாதனையை சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 46 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement