IPL 2023 : எப்போ தான் ஃபார்முக்கு வருவாரு? கெளதம் கம்பீரின் ஆல் டைம் பரிதாப சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா

Rohit Sharma Duck Out
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 3ஆம் தேதிய இரவு 7.30 மணிக்கு மொகாலியில் நடைபெற்ற 46வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 214/3 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் 82* (42) ரன்களும் ஜித்தேஷ் சர்மா 49* (217) ரன்களும் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா மட்டும் 2 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

- Advertisement -

அதை தொடர்ந்து 215 என்ற கடினமான இலக்கை துரத்திய மும்பைக்கு ரிஷி தவான் வீசிய முதல் ஓவரிலேயே கேப்டன் ரோகித் சர்மா 3 பந்துகளை எதிர்கொண்டு கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அடுத்து வந்த இசான் கிசான் அதிரடியாக 75 (41) ரன்களும் கேமரூன் கிரீன் 23 (18) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 66 (31) ரன்களும் எடுக்க கடைசியில் திலக் வர்மா 26* (10) ரன்களும் டிம் டேவிட் 19* (10) ரன்களும் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்தனர்.

பரிதாப சாதனை:
அதனால் 18.5 ஓவரிலேயே 216/4 ரன்களை எடுத்து அதிரடியான வெற்றி பெற்ற மும்பை ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களில் சேசிங் செய்த முதல் அணியாக சாதனை படைத்தது. மறுபுறம் பேட்டிங்கில் தேவையான ரன்களை எடுத்தும் அதை அப்படியே பந்து வீச்சில் கொஞ்சமும் துல்லியமாக செயல்படாமல் வாரி வழங்கிய பஞ்சாப் சொந்த ஊரில் பரிதாபமாக தோற்றது.

Rohit Sharma

முன்னதாக இந்த போட்டியில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தன்னுடைய 200வது போட்டியில் விளையாடினார். கடந்த 2013 முதல் மும்பைக்காக விளையாடி ஹிட்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு அசத்திய அவர் கடந்த 4 – 5 வருடங்களாகவே தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக கடந்த சீசனில் கேரியரில் முதல் முறையாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் மோசமாக செயல்பட்ட அவர் புள்ளி பட்டியலில் மும்பை வரலாற்றில் முதல் முறையாக கடைசி இடத்தைப் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

அதே போல இந்தியாவுக்காகவும் சமீப காலங்களாகவே கேப்டனாக நின்று அதிரடி காட்டாமல் ஓரிரு போட்டிகளில் அடித்து விட்டு பெரும்பாலும் சுமாராகவே செயல்பட்டு வரும் அவர் கபில் தேவ் போன்ற முன்னாள் வீரர்களின் விமர்சனங்களை சந்தித்தார். எனவே அவை அனைத்திற்கும் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த சீசனில் விளையாடி வரும் அவர் இதுவரை களமிறங்கிய 9 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே அரை சதமடித்து எஞ்சிய 8 போட்டிகளில் சொதப்பலான செயல்பாடுகளை வெளிப்படுத்தி எந்த மாற்றத்தை முன்னேற்றத்தையும் காணவில்லை என்பதை நிரூபித்து வருகிறார்.

Rohit

அதிலும் நேற்றைய போட்டியில் டக் அவுட்டான அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 15
1. தினேஷ் கார்த்திக் : 15
1. சுனில் நரேன் : 15
1. மந்தீப் சிங் : 15
2. அம்பத்தி ராயுடு : 14

- Advertisement -

அதை விட ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான கேப்டன் என்ற முன்னாள் வீரர் கௌதம் கம்பீரின் ஆல் டைம் பரிதாப சாதனையும் அவர் சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 10*
1. கெளதம் கம்பீர் : 10
2. ஆடம் கில்கிறிஸ்ட் : 7
2. ஷேன் வார்னே : 7
3. விராட் கோலி : 6

Rohit Sharma Gautam Gambhir

இதையும் படிங்க:MI vs PBKS : டார்கெட் ரொம்ப பெரிசு. அப்போவே நான் இந்த பிளான் போட்டுட்டேன் – ஆட்டநாயகன் இஷான் கிஷன் பேட்டி

பொதுவாக க்ளாஸ் பேட்ஸ்மேன்கள் வயது அதிகரிக்க அதிகரிக்க அனுபவத்தால் அசத்தலாக செயல்படுவார்கள். சொல்லப்போனால் இந்த சீசனில் கூட ரகானே போன்றவர்கள் எதிர்பாராத செயல்பாடுகளை வெளிப்படுத்தும் நிலையில் ரோஹித் சர்மா மட்டும் கடந்த சில வருடங்களாகவே இப்படி தொடர்ந்து சுமாராக செயல்பட்டு வருவதால் எப்போது ஃபார்முக்கு திரும்புவார் என காத்திருந்து காத்திருந்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Advertisement