MI vs PBKS : டார்கெட் ரொம்ப பெரிசு. அப்போவே நான் இந்த பிளான் போட்டுட்டேன் – ஆட்டநாயகன் இஷான் கிஷன் பேட்டி

Ishan Kishan
- Advertisement -

மொஹாலி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது 215 என்கிற பெரிய இலக்கினை அசத்தலாக எட்டிப் பிடித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தங்களது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.

MI vs PBKS

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது மும்பை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக லியாம் லிவிங்ஸ்டன் 82 ரன்களையும், ஜித்தேஷ் சர்மா 49 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது 18.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 216 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி சார்பாக இஷான் கிஷன் 75 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 66 ரன்களையும் குவித்து அசத்தினர்.

Ishan Kishan 1

இந்நிலையில் இந்த போட்டியில் 41 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 75 ரன்கள் குவித்த இஷான் கிஷனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசியே இஷான் கிஷன் கூறுகையில் : இந்த மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் கை கொடுத்தது.

- Advertisement -

எனவே நிச்சயம் இந்த போட்டியில் பந்து என்னுடைய ஆர்க்கில் பந்து வந்தால் அடிப்பதற்கு தயாராக இருந்தேன். ரிஷி தவானின் பந்து ஸ்விங் ஆனதால் அவரது பந்துவீச்சை சமாளித்து விளையாடினேன். அதன்பிறகு நான் அடிக்க நினைத்த பந்துகளை எல்லாம் அடித்தேன். 215 ரன்கள் என்கிற பெரிய இலக்கு இருக்கும்போது ஃபீல்டர்கள் பவுண்டரி லைனில் இருந்தாலும் சரி அவர்களையும் தாண்டி பெரிய ஷாட்டை அடிக்க வேண்டும் என்று பிளான் செய்து அடித்தேன்.

இதையும் படிங்க : வீடியோ : இதாங்க நட்பு, டாஸ் வென்ற பின் நண்பன் தவானை மதித்து ரோஹித் செய்த செயல் – ரசிகர்கள் நெகிழ்ச்சி

அந்த வகையில் இந்த போட்டியில் என்னுடைய பேட்டிங் சிறப்பாக இருந்தது. மேலும் கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு செல்லக்கூடாது என்றும் முடிந்த அளவுக்கு சீக்கிரமாகவே முடிக்க வேண்டும் என்பதாலே அதிரடியாக விளையாடினேன் என்று இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement