இதாங்க நட்பு, டாஸ் வென்ற பின் நண்பன் தவானை மதித்து ரோஹித் செய்த செயல் – ரசிகர்கள் நெகிழ்ச்சி

- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் மே 3ஆம் தேதியான நேற்று மொஹாலியில் நடைபெற்ற 46வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் மும்பை பவுலர்களை பந்தாடி 214/3 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியாக 84* (4 ரன்களும் ஜிதேஷ் சர்மா தனது பங்கிற்கு 49* (17) ரன்களும் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து 215 ரன்களை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலே டக் அவுட்டானாலும் கேமரூன் கிரீன் 23 (18) இசான் கிசான் 75 (41) சூரியகுமார் யாதவ் 66 (31) டிம் டேவிட் 19* (10) திலக் வர்மா 26* (10) என அடுத்து வந்த அனைத்து பேட்ஸ்மேன்களும் பஞ்சாப் பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி விரைவாக ரன்களை சேர்த்து 18.5 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். மறுபுறம் பேட்டிங்கில் அதிரடியாக எடுத்த ரன்களை அப்படியே பந்து வீச்சில் வாரி வழங்கிய பஞ்சாப் சொந்த ஊரில் படுதோல்வியை சந்தித்தது.

நட்புக்கு இலக்கணம்:
அப்படி அதிரடியாக நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வீசும் நிகழ்ச்சியில் மும்பை அணிக்காக தன்னுடைய 200வது போட்டியில் விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் ஆகியோர் கலந்து கொண்டனர். 2013 சாம்பியன்ஸ் டிராபியில் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி புதிதாக உருவாக்கிய ஓப்பனிங் ஜோடியில் இடம் பிடித்த அவர்கள் அப்போதிலிருந்து சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து சச்சின் – கங்குலி ஆகியோருக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த 2வது இந்தியா ஓப்பனிங் ஜோடியாக சாதனை படைத்துள்ளதை அனைவரும் அறிவோம்.

குறிப்பாக 10 வருடங்களாக இந்தியாவுக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக இணைந்து விளையாடி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர்கள் களத்திற்கு வெளியேயும் நல்ல நண்பர்களாகவும் நல்ல புரிதல்களை கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். அந்த நிலையில் இப்போட்டியில் டாஸ் வீசிய பின் தாம் கேட்டது போலவே தலை விழுந்ததால் ரோகித் சர்மா வென்றார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த ஷிகர் தவானிடம் என்ன செய்யட்டும் என்று கேப்டன் ரோகித் சர்மா கேட்டார். அதற்கு பந்து வீசத் தீர்மானியுங்கள் என்று ஷிகர் தவான் விளையாட்டாக சொன்னார்.

- Advertisement -

அதை ஏற்றுக்கொண்ட ரோகித் சர்மா அப்படியே பந்து வீசுவதாக அறிவித்து நண்பனுக்கு மரியாதை கொடுத்து நட்புகளுக்கு இலக்கணமாக செயல்பட்டார். அது பற்றி அஞ்சும் சோப்ரா கேட்ட போது பந்து வீசுமாறு ஷிகர் தவான் கேட்டுக் கொண்டதால் நாங்கள் பந்து வீசு தீர்மானித்துள்ளதாக கலகலப்புடன் தெரிவித்த ரோகித் சர்மா இறுதியில் மொஹாலி மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்பதால் அந்த முடிவை எடுத்துள்ளதாக உண்மையான பின்னணியையும் காரணத்தையும் தெரிவித்தார். இது பற்றி ரோகித் சர்மா பேசியது பின்வருமாறு.

“ஷிகர் தவானிடம் என்ன செய்ய வேண்டும் என்று நான் கேட்டேன். அவர் முதலில் பந்து வீசுமாறு சொன்னார். எனவே நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். பிட்ச் சிறப்பாக இருக்கிறது என்பதுடன் நாங்கள் எப்போதும் சிறப்பாக சேசிங் செய்து வருகிறோம். மேலும் மோஹாலி மைதானம் எப்போதும் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருவதால் இலக்கை எங்களால் வெற்றிகரமாக எட்டிப் பிடிக்க முடியும் என்று நம்புகிறேன்” என கூறினார்

இதையும் படிங்க:MI vs PBKS : 215 ரன்கள் டார்கெட்டா இருந்தும் நாங்க ஜெயிக்க இந்த ரூல்ஸ் தான் காரணம் – ரோஹித் அளித்த பேட்டி இதோ

என்ன தான் விளையாட்டுக்கு சொன்னாலும் அந்த இடத்தில் ஷிகர் தவான் மீதிருக்கும் நட்பை மதிக்கும் வகையில் அவர் சொன்னதற்காக பந்து வீசுவதாக ரோகித் சர்மா தெரிவித்தது இந்திய ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. அப்படி பஞ்சாப்பை அதிரடியாக தோற்கடித்த மும்பை தங்களுடைய அடுத்த போட்டியில் சென்னையை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement