தினேஷ் கார்த்திக்கின் மோசமான ஐ.பி.எல் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா – விவரம் இதோ

Rohit-and-Karthik
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பதிவு வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே அடித்தது.

- Advertisement -

மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக ஹார்டிக் பாண்டியா 34 ரன்களையும், திலக் வர்மா 32 ரன்களையும் குவித்தினர். பின்னர் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்தியிலேயே கோல்டன் டக் அவுட்டாகி ஐபிஎல் வரலாற்றில் தினேஷ் கார்த்திக்கின் மோசமான சாதனையை சமன் செய்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரராக தினேஷ் கார்த்திக் 17 முறை டக் அவுட்டாகி முதலிடத்தில் இருந்த வேளையில் தற்போது ரோகித் சர்மாவும் 17 முறை டக் அவுட்டாகி அவரது சாதனையை சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க : தோனி சிறந்த ஃபினிஷர்.. ஆனா அதை மட்டும் செய்ய மாட்டாரு.. மைக்கேல் கிளார்க் உறுதி

இவர்களுக்கு அடுத்தபடியாக மேக்ஸ்வெல் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோர் 15 முறை டக் அவுட்டாகி 3-ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement