தோனி சிறந்த ஃபினிஷர்.. ஆனா அதை மட்டும் செய்ய மாட்டாரு.. மைக்கேல் கிளார்க் உறுதி

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த எம்எஸ் தோனி சாதாரண விக்கெட் கீப்பராக மட்டுமே விளையாடி வருகிறார். அதனால் ருதுராஜ் தலைமையில் இந்த வருடம் களமிறங்கியுள்ள சென்னை இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு வெற்றி ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது.

முன்னதாக 42 வயதாகும் தோனி கடந்த வருடம் முழங்கால் வலியால் 7வது இடத்தில் பேட்டிங் செய்து ஓரிரு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். ஆனால் இந்த வருடம் இன்னும் கீழே சென்று 8வது இடத்தில் களமிறங்கும் அவர் முதலிரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்ய வராதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

மைக்கேல் கிளார்க் கருத்து:
அந்த சூழ்நிலையில் டெல்லிக்கு எதிராக நடைபெற்ற 3வது போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய தோனி 37* (16) ரன்கள் அடித்து அசத்தினார். குறிப்பாக கடைசி ஓவரில் மட்டும் 20 ரன்கள் அடித்த அவர் பறக்க விட்ட சிக்சர்களை பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் தோல்வியை மறந்து கொண்டாடி தீர்த்தனர். அதைப் பார்த்த நிறைய முன்னாள் வீரர்கள் தோனி சற்று முன்கூட்டியே களமிறங்க வேண்டும் என்று வெளிப்படையான கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் மகத்தான ஃபினிஷர் தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பாரே தவிர யார் சொன்னாலும் மேல் பேட்டிங் வரிசையில் களமிறங்க மாட்டார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் பேட்டிங் வரிசையில் மேலே வருவார் என்று நான் நினைக்கவில்லை”

- Advertisement -

“அதே சமயம் அணிக்காக சிறந்ததை செய்வதற்காக மேல் வரிசையில் களமிறங்குவதற்கான நிலைமை தேவை ஏற்பட்டால் கண்டிப்பாக அவர் அதை செய்வார். ஆனால் பந்தை நன்றாக அடிக்கிறார் என்பதற்காக மட்டும் அவர் 5 அல்லது 6வது இடத்தில் பேட்டிங் செய்வதற்காக வர மாட்டார். விளையாடுவதில் அவர் ஒரு ஜீனியஸ் என்று நான் நினைக்கிறேன். அவர் நான் பார்த்த மகத்தான ஃபினிஷர்”

இதையும் படிங்க: நாம என்ன பண்ணிருக்கோம்ன்னு பாத்தியா? 2019 உ.கோ ஃபைனலில் வழங்கிய தவறான தீர்ப்பு பற்றி அம்பயர் ஏராஸ்மஸ் பேட்டி

“எனவே அவரை தற்போதைய பாத்திரத்திலேயே சென்னை பயன்படுத்துவார்கள் என்று நான் நினைக்கிறேன்” என கூறினார். அவர் கூறுவது போல ஏற்கனவே நிறைய விளையாடி வெற்றி கண்ட தோனி இனியும் 4, 5, 6 ஆகிய இடங்களில் களமிறங்கி சாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்றே சொல்லலாம். எனவே வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஃபினிஷிங் வேலையையும் சிவம் துபே, சமீர் ரிஸ்வி போன்ற இளம் வீரர்களிடம் ஒப்படைத்துள்ள தோனி தேவைப்பட்டால் மட்டுமே பேட்டிங் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement