நாம என்ன பண்ணிருக்கோம்ன்னு பாத்தியா? 2019 உ.கோ ஃபைனலில் வழங்கிய தவறான தீர்ப்பு பற்றி அம்பயர் ஏராஸ்மஸ் பேட்டி

Marais Erasmus
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 ஐசிசி உலகக் கோப்பை ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு தொடராக அமைந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் அந்த தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மாபெரும் இறுதிப் போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின. லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் அனல் பறக்க நடைபெற்ற அந்தப் போட்டியில் கடைசி 3 பந்துகளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது டீப் மிட் விக்கெட் திசையில் பந்தை அடித்த பென் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் எடுப்பதற்காக ஓடினார். நியூசிலாந்து ஃபீல்டர் பந்தை எடுத்து ரன் அவுட் செய்வதற்காக ஸ்டம்பை நோக்கி விக்கெட் கீப்பரிடம் எறிந்தார். ஆனால் அது யாருமே நினைக்காத வகையில் 2 ரன்கள் எடுக்க ஓடிக் கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸ் பேட்டின் மீது பட்டு பவுண்டரிக்கு சென்றது.

- Advertisement -

அம்பயரின் தவறு:
அப்போது களத்தில் இருந்த நடுவர்கள் குமார் தர்மசேனா மற்றும் மரைஸ் எராஸ்மஸ் ஆகியோர் சிறிய விவாதத்திற்கு பின் 6 ரன்களை வழங்கினர். குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் எடுத்த 2 ரன்கள் மற்றும் பவுண்டரி ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக இங்கிலாந்துக்கு 6 ரன்களை நடுவர்கள் வழங்கினர். ஆனால் உண்மையாகவே அந்த இடத்தில் நடுவர்கள் விதிமுறைப்படி 5 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்க வேண்டும்.

ஏனெனில் நியூசிலாந்து ஃபீல்டர் பந்தை எடுத்து விக்கெட் கீப்பரிடம் வீசுவதற்குள் பேட்ஸ்மேன்கள் ஒருவரை ஒருவர் கடக்கவில்லை. அதாவது கிராஸ் ஆகவில்லை. அந்த வகையில் எக்ஸ்ட்ராவாக கிடைத்த ஒரு ரன்னை பயன்படுத்திய இங்கிலாந்து கடைசியில் போட்டியை சமன் செய்தது. அதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால் கடைசியில் அதிக பவுண்டரிகள் அடித்தால் கோப்பை என்ற முட்டாள்தனமான விதிமுறையை வைத்து சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்துக்கு ஐசிசி தாரை பார்த்தது வேறு கதை.

- Advertisement -

இந்நிலையில் அந்தப் போட்டியில் தாங்கள் தவறு செய்ததாக சமீபத்தில் ஓய்வு பெற்ற நடுவர் மரைஸ் எராஸ்மஸ் ஒப்புக்கொண்டுள்ளார். இது பற்றி டெலிகிராப் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அப்போட்டி நடைபெற்று முடிந்த அடுத்த நாள் காலை உணவு சாப்பிடுவதற்காக என்னுடைய ஹோட்டல் அறையை திறந்தேன். அதே சமயத்தில் குமார் தர்மசேனா தம்முடைய அறையின் கதவை திறந்தார்”

இதையும் படிங்க: டி20 உலககோப்பையில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ். காரணம் இதுதான் – விவரம் இதோ

“அப்போது என்னிடம் அவர் “நாம் என்ன தவறு செய்தோம் என்பதை நீங்கள் பார்த்தீர்களா?” என்று சொன்னார். அப்போது தான் அதைப் பற்றி நான் தெரிந்து கொண்டேன். ஆனால் களத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்ட பின் பேட்ஸ்மேன்கள் கடந்தார்களா என்பதை பற்றி உணராமலேயே “அது சிக்ஸ்” என்ற தீர்ப்பை வழங்கினோம். அதை எடுத்துக் கொள்ளவில்லை” என்று கூறினார்.

Advertisement