டி20 உலககோப்பையில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ். காரணம் இதுதான் – விவரம் இதோ

Stokes
- Advertisement -

இந்தியாவில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடர் முடிந்த சில நாட்களில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் ஐசிசி-யின் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. ஜூன் 1-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற அனைத்து அணிகளும் மும்முரம் காட்டும் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அதேபோன்று கடந்த சில ஐசிசி தொடர்களாகவே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி இம்முறை நிச்சயம் டி20 உலக கோப்பை கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்புடன் தயாராகி வருவதால் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இங்கிலாந்து அணியில் இருந்து அந்த அணியின் முன்னணி ஆல் ரவுண்டான பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்பு சற்று ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் அவர் தனது கிரிக்கெட் மேம்பாட்டிற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் தற்போது கடினமாக உழைத்து வருகிறேன். என்னுடைய பந்துவீச்சு திறனை மீண்டும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறேன்.

- Advertisement -

அதனால் தான் ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலக கோப்பை தொடர்களில் நான் விளையாடவில்லை. சமீபத்தில் இந்தியாவிற்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடிய போது தான் என்னுடைய பந்துவீச்சில் நான் எவ்வளவு பின்தங்கி இருந்தேன் என்று தெரியவந்தது.

இதையும் படிங்க : அடுத்ததாக சி.எஸ்.கே அணி விளையாட இருக்கும் போட்டியில் தோனி ஓய்வெடுக்க வாய்ப்பு – காரணம் இதுதான்

அதனால் நான் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். என்னுடைய முழு திறனுடன் மீண்டும் அணியில் இணைவேன் என்று ஸ்டோக்ஸ் கூறினார். மேலும் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பையை கைப்பற்ற வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement