பேசாம அவரை தவிர்த்து ரோஹித் உட்பட அந்த 3 சீனியர்களும் ரிட்டையர் ஆகிடலாம் – மாண்டி பனேசர் அதிரடி கருத்து

Monty Panesar Ashwin Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வரலாற்றில் 8வது முறையாக நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த தொடரில் பேட்டிங் துறையில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ் ஆகிய ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலான சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய ரோஹித் சர்மா – கேஎல் ராகுல் ஆகிய ஓப்பனிங் ஜோடி கேப்டன்களாக இருந்தும் பொறுப்பின்றி தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

DK-and-Rohit

- Advertisement -

அதே போல் 3 வருடங்கள் கழித்து கடுமையாக உழைத்து போராடி கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக் பினிஷிங் செய்வதற்காகவே தேர்வு செய்யப்பட்ட நிலையில் முதல் 4 போட்டிகளில் அந்த வேலையை செய்யாமல் சொதப்பினார். மேலும் சுழல் பந்து வீச்சுத் துறையில் கடுமையான விமர்சனங்களை கடந்து தேர்வான ரவிச்சந்திரன் அஸ்வின் பகுதி நேர பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் செய்த தவறுகளை திருத்தும் வகையில் அபாரமாக செயல்பட்டாலும் முதன்மை வேலையான பந்து வீச்சில் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்காமல் சுமாராகவே செயல்பட்டார்.

ரிட்டையர் ஆகிடலாம்:

இது போக வேகப்பந்து வீச்சுத் துறையில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலைமையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகியோரும் முக்கிய நேரங்களில் சொதப்பலாக செயல்பட்டனர். இப்படி காலம் கடந்த சீனியர் வீரர்களை கழற்றி விட்டு அடுத்த டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மாண்டி பனேசர் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும் என்று வெளிப்படையாக கோரிக்கை வைத்துள்ளார்.

Ravichandra Ashwin Rohit Sharma IND vs BAN

மேலும் வயது என்பதை நம்பராக்கும் வகையில் செயல்பட்ட விராட் கோலியை தவிர்த்து அவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அரை இறுதியில் விளையாடிய விதத்தில் இந்தியா அனைவரையும் ஏமாற்றமடைய வைத்தது. அதன் காரணமாக வெளிப்படையாக உண்மையை சொல்ல வேண்டுமெனில் சில முக்கியமான ஓய்வு முடிவுகள் விரைவில் வரலாம். ஏனெனில் அரையிறுதியில் இந்தியா வெற்றிக்கு கொஞ்சம் கூட போராடவில்லை. அப்போட்டி முழுவதுமாக ஒருதலைபட்சமாக நடந்து முடிந்தது. குறிப்பாக பட்லர் மற்றும் ஹேல்ஸ் ஆகியோருக்கு எதிராக இந்திய பவுலர்கள் விழி பிதுங்கி நின்றார்கள்”

- Advertisement -

Monty-Panesar-and-Virat-Kohli

“அரையிறுதி சுற்றுக்கு போராடி வந்த நீங்கள் அங்கே திடமான போராட்டத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் 168 என்பது குறைந்த ஸ்கோர் கிடையாது. என்னை பொறுத்த வரை ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய டாப் வீரர்கள் டி20 கிரிக்கெட்டுக்கு குட் பாய் தெரிவிப்பார்கள் என்று நினைக்கிறேன். இல்லையென்றாலும் கூட விரைவில் இந்திய அணி நிர்வாகம் மீட்டிங் போட்டு இவர்களை வரவழைத்து அவர்களது வருங்காலத்தை பற்றிய நிச்சயம் கேட்பார்கள். ஏனெனில் இது இளம் வீரர்களுக்கு வழி விடுவதற்கான நேரமாகும்”

“விராட் கோலி அபாரமான ஃபார்மில் உள்ளார். இதர இந்திய வீரர்களை காட்டிலும் அவர் ஃபிட்டாக உள்ளார். எனவே அவரது உடல் தகுதிக்காகவே வயது என்பது அவருக்கு வெறும் நம்பர் என்று சொல்வேன். அவரை நீங்கள் 2024 டி20 உலக கோப்பையிலும் பார்க்கலாம். ஆனால் அந்த தொடரில் ரோகித், தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோரை பார்க்க முடியாது. அவர்களைப் போன்ற வீரர்கள் நிறைய இருந்தாலும் அந்த 3 பேரும் டி20 கிரிக்கெட்டை விட்டு விட்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் மற்றும் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.

Advertisement