- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒழுங்கா இங்கிலிஷ் தெரியாததால் கலாய்ப்போம்.. ரோஹித் சர்மா அதுக்கு தகுதியானவர்.. யுவராஜ் ஆதரவு

ஐசிசி உலகக் கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் நடராஜன், ரிங்கு சிங் போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்படாதது பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இருப்பினும் கேப்டனாக ரோகித் சர்மா இந்தியாவை தலைமை தாங்குவதை அனைவருமே வரவேற்கின்றனர்.

ஏனெனில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று சாதனை படைத்த அவர் விராட் கோலிக்கு பின் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் அவருடைய தலைமையில் 2022 டி20 உலகக் கோப்பையில் வழக்கம் போல லீக் சுற்றில் அசத்திய இந்தியா செமி ஃபைனலில் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

யுவராஜ் ஆதரவு:
எனவே ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய இளம் இந்திய அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் பிசிசிஐ களமிறக்க உள்ளதாக செய்திகள் காணப்பட்டன. இருப்பினும் கடந்த உலகக் கோப்பையில் பாண்டியா காயமடைந்து வெளியேறிய நிலையில் 2024 ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா வெற்றி பெற்றது.

அதனால் அனுபவத்துக்கு மதிப்பளித்து மீண்டும் உலகக் கோப்பையில் இந்தியாவை தலைமை தாங்கும் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இந்தியாவை அபாரமாக வழி நடத்திய ரோஹித் சர்மா டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு தகுதியானவர் என்று யுவராஜ் சிங் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பது மிகவும் முக்கியம். அழுத்தமான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய கேப்டன் நமக்கு தேவை என்று நினைக்கிறேன். அவர் அதை செய்யக்கூடியவர். 2023 உலகக் கோப்பை ஃபைனலில் நாம் தோல்வியை சந்தித்த போது கேப்டனாக இருந்த அவர் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்றுள்ளார்”

இதையும் படிங்க: ரோஹித், பும்ரா, கோலி கிடையாது.. அந்த 2 பேர் டி20 உ.கோ மேட்ச் வின்னரா இருப்பாங்க.. சாஸ்திரி கருத்து

“எனவே அவரைப் போன்றவரே இந்தியாவை வழி நடத்த சரியானவர் என்று நான் நினைக்கிறேன். ஆரம்ப காலங்களில் ரோகித் சர்மாவின் ஆங்கிலம் சுமாராக இருக்கும். மிகவும் வேடிக்கையான நபரான அவரை நாங்கள் எப்போதும் கலாய்க்க முயற்சிப்போம். இருப்பினும் சிறப்பான இதயத்தை கொண்ட அவர் எவ்வளவு வெற்றிகளைக் கொண்டாலும் ஒரு மனிதனாக இப்படியே இருப்பார். அது தான் ரோகித் சர்மாவின் அழகாகும். உலகக் கோப்பையுடன் அவரை நான் பார்க்க விரும்புகிறேன். உலகக் கோப்பை மெடலை வெல்வதற்கு அவர் தகுதியானவர்” என்று கூறினார்.

- Advertisement -