- Advertisement -
ஐ.பி.எல்

ஆர்சிபி வெற்றிக்கு அவர் தான் முக்கிய காரணம்.. கண்டிப்பாக கோப்பை ஜெயிப்பாங்க.. ராயுடு பாராட்டு

ஐபிஎல் 2024 தொடரில் நடப்பு சாம்பியன் சென்னையை நாக் அவுட் செய்த பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மே 18ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 219 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளேஸிஸ் 47, விராட் கோலி 53 ரன்கள் எடுத்தனர்.

ஆனால் அதை துரத்திய சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 0, சிவம் துபே 7, மிட்சேல் 4 ரன்களில் அவுட்டாகி ஏற்படுத்தினர். அதனால் எதிர்ப்புறம் ரச்சின் ரவீந்தரா 61, ரகானே 33, ஜடேஜா 42*, தோனி 25 ரன்கள் எடுத்தும் சென்னை தோற்றது. அதன் காரணமாக கோப்பையை தக்க வைக்க முடியாமல் சென்னை பரிதாபமாக வெளியேறியது. மறுபுறம் தொடர்ந்து 6வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அற்புதமான கம்பேக் கொடுத்தது.

- Advertisement -

ராயுடு பாராட்டு:
அந்த அணியின் இந்த வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது தோனியின் விக்கெட்டை கொடுத்து ஜடேஜாவை ஃபினிஷிங் செய்யவிடாமல் தடுத்த யாஷ் தயாள் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் ஆர்சிபி இப்படி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற விராட் கோலி தான் முக்கிய காரணமாக திகழ்வதாக அம்பத்தி ராயுடு பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“இது விராட் கோலியின் எனர்ஜி. வெற்றிக்கான அவருடைய பசி தான் பெங்களூரு அணியை வெற்றிகரமாக மாற்றியுள்ளது. இன்றைய போட்டி துவங்குவதற்கு முன்பாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும் தண்ணீர் இடைவெளியின் போதும் அவர் ஒவ்வொரு வீரர்களிடமும் பேசி உத்வேகத்தை கொடுத்தார். மழை பெய்து கொண்டிருக்கும் போது கூட அவர் அனைத்து வீரர்களிடமும் பேசினார்”

- Advertisement -

“எனவே இன்றைய வெற்றியால் விராட் கோலிக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த சீசனில் ஆர்சிபி விளையாடிய விதத்திற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். இதே போல விளையாடி அவர்கள் கோப்பையை வெல்வார்கள் என்று நம்புகிறேன். அதற்கு அவர்கள் தகுதியானவர்கள். குறிப்பாக ஆர்சிபி அணிக்காக பல வருடங்களாக விளையாடும் விராட் கோலி ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: தேடிய கோலி.. மனமுடைந்த தல தோனி.. கோபத்தில் செய்த செயல்.. அப்டின்னா எல்லாம் முடிஞ்ச்சா? ரசிகர்கள் சோகம்

இதைத் தொடர்ந்து பெங்களூரு கிரிக்கெட் அணி பிளே ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்று குவாலிஃபயர் 2 போட்டியிலும் வென்று ஃபைனலுக்கு சென்று ஆர்சிபி கோப்பையை வெல்லும் என்று பெங்களூரு ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஏனெனில் ஏற்கனவே இந்த வருடம் மகளிரணி கோப்பையை வென்றதால் ஆடவர் அணியும் சாதிக்கும் என்று ஆர்சிபி ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -