சதத்தை கூட கொண்டாடாமல் விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட சோகம் – விவரம் இதோ

Rohit
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்த வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே ஐந்தாவது போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி மார்ச் 7-ஆம் தேதி நேற்று தரம்சாலா நகரில் துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தங்களது முதல் இன்னிங்சில் 218 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 152 ரன்கள் என்கிற நல்ல நிலையுடன் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.

இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா 103 ரன்களையும், சுப்மன் கில் 110 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்த வேளையில் தேவ்தத் படிக்கல் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். தற்போதி இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 100 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பாக விளையாடி சதமடித்த இந்திய அணியின் ரோகித் சர்மா அந்த சதத்தை பெரிதாக கொண்டாடவில்லை. ஏனெனில் சதத்தை விட தொடர்ந்து பெரிய இன்னிங்க்ஸை விளையாட வேண்டியது அவசியம் என்று நினைத்த அவர் ஹெல்மெட்டை கூட கழட்டாமல் பேட்டை மட்டும் சற்று தூக்கி காண்பித்து விட்டு தொடர்ந்து விளையாட ஆரம்பித்து விட்டார்.

இதையும் படிங்க : அண்டர்-19 முதல் 100 வரை.. தனித்துவமான உலக சாதனை படைத்த வில்லியம்சன் – சௌதீ.. சவால் விடும் ஆஸி

ஆனால் 162 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரி மற்றும் 3 சிக்சருடன் 103 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பரிதாபமாக வெளியேறினார். இருப்பினும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12-வது சதத்தை பதிவு செய்ததோடு ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்காக 48 சதங்கள் குவித்து ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement