2024 டி20 உ.கோ : கோலியும் நானும் ஓப்பனிங்கா? எல்லாமே பொய்.. அவர பாக்கவே இல்லை.. ரோஹித் ஓப்பன்டாக்

Rohit Sharma Virat Kohli
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்தும் இந்தத் தொடர் முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. அதில் தற்போது நடைபெறும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்கள் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது.

முன்னதாக டி20 கிரிக்கெட்டில் சற்று குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் மெதுவாக விளையாடும் விராட் கோலியை 2024 டி20 உலகக் கோப்பையில் கழற்றி விட தேர்வுக்குழு முடிவெடுத்ததாக செய்திகள் வெளிவந்தன. அந்த நிலையில் உலகக்கோப்பை இந்திய அணியின் தேர்வு பற்றி அஜித் அகர்கர் மற்றும் ராகுல் டிராவிட்டுடன் கேப்டன் ரோகித் சர்மா இம்மாத துவக்கத்தில் துபாயில் ஸ்பெஷல் மீட்டிங் நடத்தியதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வலம் வருகின்றன.

- Advertisement -

மறுக்கும் ரோஹித்:
அந்த மீட்டிங்கில் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவுடன் விராட் கோலி துவக்க வீரராக களமிறங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்தனர். இந்நிலையில் அதை முற்றிலுமாக மறுக்கும் ரோகித் சர்மா அந்த செய்திகள் அனைத்தும் போலியானவை என்று கூறியுள்ளார். மேலும் உலகக் கோப்பை சம்மந்தமாக அஜித் அகர்கரை துபாயில் பார்க்கவில்லை என்றும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் யாரையும் சந்திக்கவில்லை. அஜித் அகர்கர் துபாயில் எங்கேயோ கோல்ஃப் விளையாடிக் கொண்டிருப்பார். ராகுல் டிராவிட் பெங்களூருவில் தம்முடைய குழந்தை விளையாடுவதை பார்த்துக் கொண்டிருப்பார். அதற்கு முன்பாக மும்பையில் இருந்த அவர் தன்னுடைய பையனை செம்மண் பிட்ச்சில் விளையாட வைத்துக் கொண்டிருந்தார்”

- Advertisement -

“அவ்வளவு தான் விஷயம். உண்மையாக நாங்கள் யாரும் சந்திக்கவில்லை. இன்றைய காலகட்டத்தில் நான், ராகுல், அஜித் அல்லது பிசிசிஐ சார்பில் யாரேனும் ஒருவர் கேமரா முன் வந்து பேசுவதை தவிர்த்து மற்ற அனைத்தும் பொய்யானவை. எங்களுடைய அணியில் ரிஷப் பண்ட் எப்போதுமே மற்றவர்களை சிரிக்க வைக்கக் கூடியவர். மிகவும் வேடிக்கையான அவரை குழந்தை முதலே நான் பார்த்து வருகிறேன்”

இதையும் படிங்க: 2024 டி20 உலகக் கோப்பையில் தோனி – டிகே ஆகியோரில் யாரை விளையாட வைப்பீங்க.. கேப்டன் ரோஹித் பதில்

“காயத்தால் அவர் ஒன்றரை வருடங்களாக விளையாடாதது எனக்கு ஏமாற்றமாக அமைந்தது. அவரைப் போன்ற ஒருவர் ஸ்டம்புக்கு பின்னால் விக்கெட் கீப்பராக இருப்பது உங்களை சிரிக்க வைக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தின் இறுதியில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement