எங்களுக்கு ஒன்னுமே தெரியாதுன்னு அர்த்தமில்ல.. அந்த 2 சம்பவங்களை மறந்துடாதீங்க.. கேப்டன் ரோஹித் பதிலடி

Rohit Sharma Press
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாபிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி வரலாற்றில் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று புதிய சரித்திரம் படைப்பதற்கான வாய்ப்பை மீண்டும் நழுவ விட்டது.

அந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஒரு இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்த அதே பிட்ச்சில் இந்தியா ஒருமுறை கூட 300 ரன்கள் தொட முடியாத அளவுக்கு மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது தோல்விக்கு காரணமானது. குறிப்பாக முதல் இன்னிங்சில் கேஎல் ராகுல் போராடி 101 ரன்களும் 2வது இன்னிங்ஸில் விராட் கோலி 76 ரன்களும் எடுக்காமல் போயிருந்தால் இந்தியா இன்னும் மோசமான தோல்வியை சந்தித்திருக்கும் என்றே சொல்லலாம்.

- Advertisement -

தரத்தை மறக்காதீங்க:
குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா 5, 0 என 2 இன்னிங்சிலும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான நிலையில் ஸ்ரேயாஸ், கில், ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களும் மோசமாக விளையாடினார்கள். இந்நிலையில் இதே பேட்டிங்கை வைத்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் 2020/21இல் வெற்றி கண்டதை மறக்க வேண்டாம் என்று கேப்டன் ரோஹித் சர்மா இந்திய பேட்டிங் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி முதல் போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய வீரர்களுக்கு உத்வேகம் தேவையில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் அவர்கள் இப்படி ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள் அவ்வளவு தான். நாங்கள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் வென்றதை மறந்து விடாதீர்கள். எங்களுடைய பேட்டிங்கை வைத்து ஆஸ்திரேலியாவில் வென்ற நாங்கள் இங்கிலாந்தில் தொடரை சமன் செய்தோம்”

- Advertisement -

“எனவே இந்த தோல்வியால் இந்தியாவுக்கு வெளியே எங்களுக்கு பேட்டிங் செய்யவே தெரியாது என்று அர்த்தமல்ல. சில நேரங்களில் எதிரணி உங்களை விட சிறப்பாக விளையாடும். அதனால் அவர்கள் 110 ஓவர்கள் பேட்டிங் செய்ததைப் போல் எங்களால் முடியாது என்று அர்த்தமல்ல. நீங்கள் கடந்த 4 – 5 வெளிநாட்டு தொடர்களில் எங்களுடைய ஸ்கோர் கார்டை எடுத்து பாருங்கள்”

இதையும் படிங்க: கேள்விக்குறியான சுப்மன் கில்லுக்கு பதிலா.. அந்த இளம் வீரருக்கு சான்ஸ் கொடுக்கலாம்.. டிகே ஓப்பன்டாக்

“முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுல் விளையாடிய விதம் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது. இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் களமிறங்கியதும் பேட்டை சுழற்ற முடியாது. கட்டுப்பாடு மற்றும் அதிரடி ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொண்டு விளையாட வேண்டும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து குறைந்தபட்சம் கடைசி போட்டியில் வென்று இத்தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement