IND vs PAK : மகிளா ஜெயவர்தனே, விராட் கோலியின் சாதனைகளை சமன் செய்த ரோஹித், டி20 கிரிக்கெட்டில் படைத்த புதிய உலகசாதனை

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul
- Advertisement -

ஆகஸ்ட் 28ஆம் தேதியான நேற்று ஐக்கிய அரபு நாடுகளில் உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா பாகிஸ்தான் மோதிய 2022 ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் இந்திய பவுலர்களின் துல்லியமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஆரம்பம் முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 19.4 ஓவரில் 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் பாபர் அசாம் 10, பகார் ஜமான் 10, இப்திகர் அஹமத் 28, சடாப் கான் 2, குஷ்தில் ஷா 2, ஆசிப் அலி 9 என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் முகமது ரிஸ்மான் 43 (42) ரன்கள் எடுத்தார்.

Bhuvaneswar Kumar

- Advertisement -

கடைசியில் ஹாரீஸ் ரவூப் 13* (7) தஹானி 16* (6) என டெயில் எண்டர்கள் மானத்தைக் காக்கும் ரன்களை சேர்த்தனர். அதைத் தொடர்ந்து 148 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு முதல் ஓவரிலேயே கேஎல் ராகுல் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க அடுத்து களமிறங்கிய விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோகித் சர்மா 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தார். அதில் ரோகித் சர்மா 12 (18) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் போராடிய விராட் கோலியும் 35 (34) ரன்களில் அவுட்டானார்.

போராட்ட வெற்றி:
அந்த நிலைமை நல்ல பார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவும் 18 (18) ரன்களில் அவுட்டானதால் பின்னடைவை சந்தித்த இந்தியாவுக்கு மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா – ஹர்திக் பாண்டியா ஆகியோர் 5வது விக்கெட்டுக்கு முக்கியமான 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தனர். அதில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் நிதானமாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா கடைசி வரை 35 (29) ரன்களில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Hardik Padnday IND vs PAk

இருப்பினும் மறுபுறம் அழுத்தத்தை அசால்டாக எதிர்கொண்ட ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரிகளுடன் 33* (17) ரன்களை விளாசி சிக்சருடன் பினிஷிங் கொடுத்தார். அதனால் 19.4 ஓவரில் 148/5 ரன்களை எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்த ஆசிய கோப்பையை வெற்றியுடன் துவக்கியுள்ளது. இந்த வெற்றிக்கு அனைவரும் முக்கிய பங்காற்றினாலும் 3 விக்கெட்டுகளையும் 33* ரன்களையும் எடுத்து கருப்பு குதிரையாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

கலக்கும் ரோஹித்:
முன்னதாக கடந்த வருடம் இதே துபாயில் கடைசியாக மோதியபோது விராட் கோலி தலைமையிலான இந்தியாவை உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக தோற்கடித்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அவமான தோல்வியை பரிசளித்தது. அதனால் தலை குனிந்த இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் அற்புதமாக செயல்பட்டு தக்க பதிலடி கொடுத்து பழி தீர்த்துள்ளது. அந்த உலகக் கோப்பைக்கு பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் எதிரணிகளை பந்தாடி வரும் இந்தியா தற்போது பாகிஸ்தானையும் பந்தாடியுள்ளது.

IND vs PAK Asia Cup

மேலும் இதுவரை 36 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ள ரோகித் சர்மா அதில் 30 வெற்றிகளை உலகின் இதர கேப்டன்களை காட்டிலும் அதிகபட்சமாக 83.33% என்ற அபாரமான சராசரியில் பதிவு செய்துள்ளார். அதைவிட சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளிலேயே 30 வெற்றிகளைப் பதிவு செய்த கேப்டன் என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் வேறு எந்த கேப்டனும் 36 போட்டிகளில் 30 வெற்றிகளை பதிவு செய்ததே கிடையாது.

- Advertisement -

1. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த 2வது இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. எம்எஸ் தோனி : 41
2. ரோஹித் சர்மா : 30*
3. விராட் கோலி : 30

Rohith

2. அத்துடன் ஆசிய கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற இந்தியாவின் எம்எஸ் தோனி மற்றும் பாகிஸ்தானின் மொய்ன் கான் ஆகியோரது சாதனைகளையும் (தலா 6) ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

3. மேலும் இப்போட்டியில் 12 ரன்களை குவித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை மீண்டும் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்திலை முந்தி படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 3499
2. மார்ட்டின் கப்டில் : 3497
3. விராட் கோலி : 3343

Guptill-and-Rohit

4. அதுபோக ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற இலங்கையின் ஜாம்பவான் மகிளா ஜெயவர்தனே சாதனையையும் சமன் செய்துள்ளார். இருவருமே அதிகபட்சமாக 28 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

Advertisement