சரவெடி சிக்ஸர்களை பறக்க விட்ட ஹிட்மேன் ரோஹித் சர்மா – ரெய்னாவின் 2 சாதனையை உடைத்து அபாரம் (வீடியோ இணைப்பு)

Rohit Sharma SIx
Advertisement

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் நேபாளை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் 1 புள்ளியை மட்டுமே பெற்ற இந்தியா இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த
நேபாள் முடிந்தளவுக்கு இந்தியாவுக்கு சவாலை கொடுத்து 48.2 ஓவரில் 230 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆசிப் சேக் 58 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து சேசிங்கை இந்தியா துவக்கிய போது மழை வந்ததால் 23 ஓவரில் 145 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு உருவாக்கப்பட்டது. அந்த இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி நேபாள் பவுலர்களை சிறப்பாக எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

அசத்திய ஹிட்மேன்:
குறிப்பாக கடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தடுமாறிய ரோகித் சர்மா இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 6 பவுண்டரி 5 சிக்சருடன் 74* (59) ரன்கள் விளாசினார். அவர்கள் மறுபுறம் தனது பங்கிற்கு நிதானத்தை காட்டிய சுப்மன் கில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 67* (62) ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20.1 ஓவரிலேயே இலக்கை எட்டி வென்ற இந்தியாவின் வெற்றிக்கு 74* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

முன்னதாக இப்போட்டியில் பவுண்டரிகளுக்கு நிகராக 5 சிக்சர்களை அடித்த ரோகித் சர்மா மைதானத்திற்கு வந்த ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தினார். குறிப்பாக ஆரி வீசிய 12வது ஓவரின் 4வது பந்தில் முட்டி போட்டு ஆஃப் சைடில் வந்த பந்தை பிளிக் ஷாட் வாயிலாக ஆன் சைட் பக்கம் திருப்பி அவர் அடித்த சிக்சர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது என்றே சொல்லலாம்.

- Advertisement -

அந்த வகையில் இப்போட்டியில் அடித்த 5 சிக்ஸர்களையும் சேர்த்து ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் ஆல் டைம் சாதனையை தகர்த்த ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 22*
2. சுரேஷ் ரெய்னா : 18
3. சௌரவ் கங்குலி : 13
4. எம்எஸ் தோனி/வீரேந்திர சேவாக் : தலா 12

இதையும் படிங்க: IND vs NEP : ஓப்பனர்ஸ் நல்லா தான் ஆடுனாங்க. ஆனாலும் நாங்க தோக்க இதுதான் காரணம் – நேபாள் கேப்டன் வருத்தம்

அது போக இந்த 5 சிக்ஸரையும் சேர்த்து இலங்கை மண்ணில் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனையையும் ரோகித் சர்மா உடைத்துள்ளார். இதன் வாயிலாக இந்தியாவின் சிக்ஸர் கிங் என்பதை மீண்டும் ரோகித் சர்மா நிரூபித்துள்ளார் என்றே சொல்லலாம். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 27*
2. சுரேஷ் ரெய்னா : 25
3. சௌரவ் கங்குலி : 22
4. சச்சின் டெண்டுல்கர் : 20
5. ஷிகர் தவான் : 17

Advertisement