
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமாராக விளையாடி வருகிறார். குறிப்பாக சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் தோல்வியை சந்தித்த இந்தியா முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அந்தத் தோல்விக்கு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ரோகித் சர்மா சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது.
அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் தன்னைத்தானே இந்திய அணியிலிருந்து நீக்கிக் கொண்ட முதல் கேப்டனாக ரோகித் சர்மா மோசமான சாதனையும் படைத்தார். தற்போது 37 வயதாகும் அவர் இனியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபார்மை கண்டறிந்து விளையாட வேண்டுமெனில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவது அவசியம் என்று கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள்.
இந்நிலையில் ரஞ்சிக் கோப்பையில் வரும் ஜனவரி 23ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் எனக்கு எதிரான போட்டியில் மும்பைக்காக விளையாட உள்ளதாக ரோகித் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு நேரம் சரியாக இருந்ததாலேயே உள்ளூரில் இவ்வளவு நாட்கள் விளையாடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“45 நாட்கள் வீட்டில் உட்காரும் அளவுக்கு எங்களுடைய காலண்டர் அட்டவணை இல்லாததை உங்களால் பார்க்க முடியும். ஐபிஎல் முடிந்த பின் எந்த தொடர்களும் இல்லாமல் இருந்தால் மட்டுமே நேரம் இருக்கும். ஆனால் நம்முடைய உள்ளூர் தொடர்கள் அக்டோபர் – செப்டம்பர் மாதங்களில் துவங்கி பிப்ரவரி – மார்ச் மாதங்களில் முடிகிறது. அந்த நேரங்களில் இந்திய அணி நிறைய கிரிக்கெட்டை விளையாடுகிறது”
“எனவே குறிப்பிட்ட ஃபார்மட்டில் விளையாடாத வீரர்கள் உள்ளூரில் விளையாடுவார்கள். ஆனால் கடந்த 6 – 7 வருடங்களில் குறைந்தபட்சம் என்னை பொறுத்த வரை 2019 முதல் தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறேன். அதனால் உள்ளூரில் விளையாடுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால் தற்போது அதை நாங்கள் சரி செய்ய பார்க்கிறோம்”
இதையும் படிங்க: கொல்கத்தா கோட்டா? சிராஜை விட ராணா என்ன செஞ்சுட்டாரு? கம்பீரின் தவறை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா
“இங்கே யாருக்கும் எந்த இடமும் உறுதியாக கொடுக்கப்படவில்லை. இது நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் மற்றும் எவ்வளவு ஓய்வு தேவை என்பதை பொறுத்தது. அதை வைத்து நாங்கள் உள்ளூரில் விளையாடுவதை தீர்மானித்துள்ளோம். ஆனால் தற்போது நேரம் இருந்தால் அனைத்து வீரர்களும் உள்ளூரில் விளையாட வேண்டும் என்ற நிலைமை கொண்டு வரப்பட்டுள்ளது” எனக் கூறினார்.