
ஐசிசி 2024 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்கள் கழித்து வென்று சாதனை படைத்துள்ளது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் ஆரம்பம் முதலே எதிரணிகளை தோற்கடித்த இந்தியா மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதனால் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக சந்தித்து வந்த தோல்விகளையும் நிறுத்தியுள்ள இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது.
குறிப்பாக கடந்த 10 வருடங்களாக லீக் சுற்றில் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா நாக் அவுட் சுற்றில் தோல்வியை சந்தித்து வந்தது. குறிப்பாக கடந்த உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்ற இந்தியா மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அதனால் தென்னாப்பிரிக்கா சோக்கர் என்றால் இந்தியா நாக் அவுட் போட்டிகளின் சோக்கர் என்று எதிரணி ரசிகர்கள் கிண்டலடித்தனர்.
உலக அளவில் இந்தியா:
ஆனால் அந்த கிண்டல்களை 2007 உலகக் கோப்பையில் படுதோல்வியை சந்தித்த அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் உடைத்துள்ள இந்தியா மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்தது. அதன் காரணமாக ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் அனைவரும் ஆனந்த கண்ணீருடன் வெற்றியை கொண்டாடினர். குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா தமக்கு வாழ்நாளில் மறக்க முடியாத வெற்றியை கொடுத்த பார்படாஸ் மண்ணில் இந்தியாவின் மூவர்ண கொடியை நாட்டி உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.
அத்துடன் பார்பர்டஸ் மைதானத்தில் உள்ள பிட்ச்சில் இருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து சாப்பிட்ட ரோஹித் சர்மா தாய் மண்ணுக்கு நிகராக மரியாதை செலுத்தினார். இதற்கு முன் போன்ற உணர்ச்சி மிகுந்த செயலை பிரபல ஜாம்பவான் டென்னிஸ் வீரர் நோவோக் ஜோக்கோவிச் செய்துள்ளார். எனவே அதை பேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ள விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜோகோவிச் போல ரோஹித் சர்மாவும் சாதித்துள்ளதாக பாராட்டியுள்ளது.
அதே போல கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி தன்னுடைய கடைசி முயற்சியில் அர்ஜென்டினாவுக்காக உலகக் கோப்பையை வென்றார். தற்போது அதே போல ரோகித் சர்மாவும் தன்னுடைய கடைசி முயற்சியில் உலகக் கோப்பை வந்துள்ளதாக ஃபிபா தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரது புகைப்படத்தையும் பதிவிட்டு பாராட்டியுள்ளது.
இதையும் படிங்க: அவங்ககூட விளையாடுனது எனக்கு கிடைச்ச பாக்கியம்.. அவங்க 2 பேரையும் நான் நிறைய மிஸ் பண்ணுவேன் – பாண்டியா உருக்கம்
இது போக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ள விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராமில் பெலிங்கம், டேவிட் பெக்கம் போன்றவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் டபிள்யூடபிள்யூஇ பக்கத்தில் ரோஹித் சர்மாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியால் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவின் புகழ் உலகளவில் மற்ற விளையாட்டுக்களால் பாராட்டப்பட்டு ஜாம்பவான்களுடன் ஒப்பிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.