இந்த வேர்ல்டுகப்ல அவரோட வெறித்தனமான ஆட்டத்துக்கு காரணம் இதுதான் – ரோஹித்தின் சிறுவயது கோச் பேட்டி

Rohit
Advertisement

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இன்னும் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி என இரண்டு ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்த இரண்டிலும் வெற்றி பெற்றால் இந்திய அணி மூன்றாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை கையில் ஏந்தும் அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களாக மூன்று பேர் இடம் பிடித்துள்ளனர்.

அதில் விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் ஏற்கனவே 2011-ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது அந்த அணியில் பங்கேற்று உலக கோப்பையில் கையில் ஏந்தி விட்டார்கள். ஆனால் மூத்த வீரராக ரோகித் சர்மா மட்டுமே ஒருநாள் உலகக் கோப்பை வெல்லாமல் இருக்கிறார்.

- Advertisement -

கடந்த 2011-ஆம் ஆண்டு தனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்த அவர் தற்போது இந்திய அணியின் கேப்டனாக உலக கோப்பையை கையில் ஏந்தும் நெருக்கத்தை அடைந்து விட்டார். எதிர்வரும் இந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் நிச்சயம் அவரது கனவு நிறைவேறும்.

இந்நிலையில் ரோகித் சர்மா இந்த தொடரில் வெற்றிக்காக இவ்வளவு தீவிரமாக இருப்பது குறித்தும், அவருடைய பேட்டிங் அதிரடியாக இருப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்தும் அவரது சிறுவயது பயிற்சியாளர் ஒரு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து தினேஷ் லாட் கூறுகையில் : ரோகித் சர்மாவிற்கு இதுவே கடைசி உலக கோப்பையாக இருக்கலாம். எனவே உலக கோப்பையை அவர் கையில் ஏந்த வேண்டும் என்றும் இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தான் அவர் விளையாடி வருவதாக எனக்கு தெரிகிறது.

- Advertisement -

தற்போது ரோகித் சர்மாவிற்கு 36 வயதாகிறது அடுத்த உலக கோப்பையில் அவர் விளையாட வேண்டும் என்றால் 40 வயதை எட்டி விடுவார். ஆனால் அது சாத்தியமில்லாத காரியம் என்று நினைக்கிறேன். அதன் காரணமாகவே அவர் இம்முறை உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு அவர் இந்திய அணியில் ஒரு அங்கமாக இல்லை.

இதையும் படிங்க : அந்த நியூஸிலாந்து பேட்ஸ்மேன் பெரிய சவாலா இருப்பாரு.. குல்தீப் உள்ளிட்ட இந்திய பவுலர்களை எச்சரித்த கவாஸ்கர்

எனவே இம்முறை நம் நாட்டிற்காக உலக கோப்பையை வென்று பரிசளிப்பதற்காகவே அவர் இவ்வளவு தீவிரமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். ரோஹித் விளையாடுவதை பார்க்கும்போது ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடிப்பார் போன்று தான் தெரிகிறது. அந்த அளவிற்கு நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதோடு அணியின் நலனுக்காகவே அவர் அதிரடியாகவும் விளையாடுகிறார். வான்கடே மைதானத்தில் ரோஹித் சதம் அடிக்க வேண்டும் அதுவே என்னுடைய விருப்பம் என்றும் தினேஷ் லாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement