IPL 2023 : இதே மாதிரி ரோஹித் சர்மா யூஸ் பண்ணா ட்ரெண்ட் போல்ட் மாதிரி வருவாரு – அர்ஜுன் டெண்டுல்கருக்கு முன்னாள் நியூசி வீரர் பாராட்டு

Arjun Tendulkar
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் இதுவரை களமிறங்கிய 7 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் தடுமாறி வருகிறது. அந்த அணிக்கு பும்ரா, ஜோப்ரா ஆர்ச்சர் காயத்தால் வெளியேறிய நிலையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குவது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைத்து வருகிறது. அதே போல் நீண்ட கால காத்திருப்புக்கு பின் ஒரு வழியாக இந்த சீசனில் அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர் பவர் பிளே ஓவரை தாண்டி ஒரு பந்து வீசினால் கூட சரமாரியாக அடி வாங்குவதால் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்வதற்கு ரோகித் சர்மா திண்டாடி வருகிறார்.

Arjun Tendulkar 1

- Advertisement -

ஏனெனில் வெறும் 110 – 120 கி.மீ என்ற சராசரியான வேகத்தில் வீசும் அவர் பவர் பிளே ஓவர்களில் புதிய பந்தை ஸ்விங் செய்து சிறப்பாகவே பந்து வீசுகிறார். அதனால் ஹைதராபாத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 20 ரன்கள் கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் புவனேஸ்வர் குமாரை அவுட்டாக்கி தன்னுடைய முதல் விக்கெட்டை எடுத்தது ரோகித் சர்மா, சச்சின் உட்பட அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தாலும் டெத் ஓவர்களில் இந்த வேகத்தில் அந்த இடத்தில் ரிங்கு சிங் போன்ற இளம் பேட்ஸ்மேன்கள் இருந்திருந்தால் கூட அடித்து நொறுக்கியிருப்பார்கள் என்று ரசிகர்கள் எச்சரித்தனர்.

ட்ரெண்ட் போல்ட் மாதிரி:
அந்த நிலைமையில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் எதிர்பார்க்கப்பட்டது போலவே டெத் ஓவரில் முதல் முறையாக 16வது ஓவரை வீசிய அவரை ஹர்ப்ரீத் சிங் – சாம் கரண் ஆகியோர் சரமாரியாக அடித்து நொறுக்கி 31 ரன்கள் குவித்தனர். அதனால் மோசமான சாதனை படைத்த அர்ஜுன் டெத் ஓவர்களுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்பதை உணர்ந்த ரோகித் சர்மா கடைசியாக குஜராத்துக்கு எதிராக நடந்த போட்டியில் 2 ஓவருடன் நிறுத்தி விட்டார். மொத்தத்தில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் எதிலுமே முழுமையாக 4 ஓவர்களை வீசவில்லை.

Arjun Tendulkar

அதனால் பகுதி நேர பவுலரை போல எக்ஸ்ட்ரா பவுலரை போல அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் விளையாடி வருவதாக முன்னாள் வீரர் டாம் மூடி விமர்சித்தார். இருப்பினும் கேமரூன் க்ரீன் போன்ற சர்வதேச அளவில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்களே டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கும் நிலையில் அர்ஜுன் டெண்டுல்கரை அங்கே பயன்படுத்தாமல் பவர் பிளே ஓவர்களில் மட்டும் ரோகித் சர்மா சரியாக பயன்படுத்துவதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் பாராட்டியுள்ளார். எனவே இதே போல அவரை சரியாக பயன்படுத்தினால் புதிய பந்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி எதிரணிகளை மிரட்டும் ட்ரெண்ட் போல்ட், தீபக் சஹர் போல வருவார் என்று தெரிவிக்கும் சைமன் டௌல் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பஞ்சாப்புக்கு எதிரான ஒரு மோசமான போட்டிக்காக அர்ஜுன் டெண்டுல்கரை அணியிலிருந்து தூக்கி வீசாமல் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பதே அவரைப் போன்ற இளம் வீரர்களை வளர்ப்பதில் நீங்கள் செய்யக்கூடிய கடைசி முயற்சியாகும். ஏனெனில் இதுவரை அவர் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமெனில் அவர் டெத் ஓவர்களில் வீசுவதற்கு இன்னும் தயாராகவில்லை என்பதை ரோகித் சர்மா நன்கு உணர்ந்துள்ளார் என்று நினைக்கிறேன். குறிப்பாக அர்ஜுன் டெண்டுல்கர் கடைசி 5 அல்லது 6 ஓவர்களில் வீசும் பவுலர் கிடையாது. ஆனால் அதையும் தாண்டி ஒரு போட்டியில் அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு மும்பைக்கு தோல்வியாக அமைந்தது”

Simon Doull

இதையும் படிங்க:RR vs CSK : 15 வருட வரலாற்றை மாற்றி எழுதிய ராஜஸ்தான் – மும்பையின் தம்பியாக சிஎஸ்கே’வை சாய்க்கும் சோகம்

“பொதுவாக ட்ரெண்ட் போல்ட், தீபக் சஹர் போட்டியின் முதல் 2 – 3 ஓவர்களை வீசி புதிய பந்தை ஸ்விங் செய்து அச்சுறுத்தலை கொடுத்தாலும் இறுதியில் ரன்களை வாரி வழங்குவார்கள் என்பதால் கேப்டனாக நீங்கள் அவர்களை மறந்து விடுவீர்கள். அதே போல தற்சமயத்தில் போட்டியின் கடைசி கட்ட ஓவர்களில் பயன்படுத்தும் அளவுக்கு அர்ஜுன் டெண்டுல்கர் போதிய அனுபவமில்லாமல் இருக்கிறார்” என்று கூறினார்.

Advertisement