அவருக்கும் பயம் வரும் இல்ல.. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ரோஹித் சர்மா – செய்த செயல்

Rohit
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது ஏற்கனவே அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கை கைப்பற்றியது.

அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்னது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது.

- Advertisement -

அந்த போட்டியின் மூன்றாவது நாளிலேயே இந்திய அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3-ஆம் தேதி துவங்க உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்பதால் தற்போது இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு கேப்டன் ரோகித் சர்மா மற்ற வீரர்களை காட்டிலும் கூடுதலாக நேரத்தை செலவிட்டு முதல் ஆளாக வந்து பயிற்சியை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏனெனில் அண்மையில் நடைபெற்ற முடிந்த 50 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்து இந்திய அணி வெளியேறிய போது ஐபிஎல் தொடரின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் நீக்கப்பட்டார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தன்னுடைய திறனை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தற்போது ரோகித் சர்மா தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க : வலைப்பயிற்சியின் போது காயமடைந்த இந்திய வீரர். இதை சாக்கா வச்சே அணியில் இருந்து – தூக்கவும் வாய்ப்பு இருக்கு

அதிலும் குறிப்பாக சீனியர் வீரர்களான விராட் கோலி, கே.எல் ராகுல், பும்ரா ஆகியோர் கூட நேற்று பயிற்சியில் ஈடுபடாத வேளையில் ரோகித் சர்மா தீவிர பயிற்சியை மேற்கொண்டு உள்ளார் என்று கூறப்படுகிறது. அவருடன் இந்திய பந்துவீச்சாளர்களுக்கும் அதிக நேரம் பயிற்சி அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement