- Advertisement -
இந்திய கிரிக்கெட்

95 சிக்ஸ்.. 6 சதங்கள்.. சேவாக், கெய்ல், கோலி, சச்சினை முந்திய ரோஹித் சர்மா.. ஆஸியில் உலக சாதனை

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இருப்பினும் சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. அதனால் ஆஸ்திரேலியா தொடரை வென்ற போதிலும் இந்தியா ஒயிட்வாஸ் அவமானத் தோல்வியைத் தவிர்த்தது.

அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 237 இலக்கை 38.3 ஓவரில் இந்தியா ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து தொட்டது. அதற்கு விராட் கோலி 74*, ரோஹித் சர்மா சதத்தை அடித்து 121* ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற செய்தனர். அதனால் 2027 உலகக் கோப்பைக்கு முன் தங்களை கழற்றி விட நினைக்கும் தேர்வுக்குழுவுக்கு அவர்கள் தக்க பதிலடியும் கொடுத்தனர்.

- Advertisement -

ரோஹித் சர்மாவின் சாதனைகள்:

முன்னதாக அந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 3 சிக்சர்கள் அடித்தார். அதையும் சேர்த்து தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் அவர் 95 சிக்சர்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக சேனா நாடுகளில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா: 95*
2. கிறிஸ் கெய்ல்: 92
3. சனாத் ஜெயசூர்யா: 89

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவில் ரோஹித் சர்மா 6வது முறையாக சதத்தை அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் சவாலான ஆஸ்திரேலியாவில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற உலக சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரோஹித் சர்மா: 6
2. விராட் கோலி/குமார் சங்ககாரா: தலா 5

- Advertisement -

பெஸ்ட் ஓப்பனிங் பேட்ஸ்மேன்:

இது போக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனையையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரோஹித் சர்மா: 15787
2. வீரேந்திர சேவாக்: 15758
3. சச்சின் டெண்டுல்கர்: 15335

இதையும் படிங்க: சங்ககாரா வாழ்நாள் சாதனையை உடைத்த கிங் கோலி.. சச்சினை முந்தி சேஸ் மாஸ்டராக 2 உலக சாதனை

அத்துடன் இந்தியாவுக்காக 35 வயது கடந்த பின் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்துள்ள ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரோஹித் சர்மா: 9
2. சச்சின் டெண்டுல்கர்: 8
3.சுனில் கவாஸ்கர்: 6
4. விராட் கோலி/அனில் கும்ப்ளே: தலா 4

- Advertisement -