
மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரோகித் சர்மா நேற்று கே.கே.ஆர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 78 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் அடித்த இந்த ரன்களின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியானது எளிதாக கொல்கத்தா அணியை வீழ்த்தி இந்த சீசனின் முதல் போட்டியில் வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தியது.
கடந்த 13 ஆண்டுகளாக ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றது மும்பை அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் கொல்கத்தா அணி முதலில் விளையாடி 200 ரன்களை குவித்து இருந்தாலும் அதனை தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்களிலேயே 221 ரன்கள் இலக்கினை சேசிங் செய்து அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த போட்டியின் போது நேரடியாக பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடிய ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்ததால் அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று ரோகித் சர்மா அடித்த இந்த 78 ரன்கள் மூலம் அவர் ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலியின் முக்கிய சாதனை ஒன்றிணையும் முறியடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியில் 78 ரன்கள் அடித்த அவர் இதுவரை கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் 1161 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : இந்த சீசன் ஸ்டார்ட் ஆகறதுக்கு முன்னாடியே ஷர்துல் தாகூர் கிட்ட தெளிவா சொல்லிட்டேன் – பாண்டியா ஓபன்டாக்
இவருக்கு முன்னதாக பஞ்சாப் அணிக்கு எதிராக விராட் கோலி 1159 ரன்கள் அடித்திருந்ததே ஒரு அணிக்கு எதிராக ஒரு வீரர் ஐபிஎல் போட்டிகளில் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. அவரது இந்த சாதனையை நேற்று ரோகித் சர்மா தகர்த்தது குறிப்பிடத்தக்கது.