தல தோனியின் தனித்துவமான சாதனையை உடைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா.. 49 ரன்னில் புதிய சாதனை

Rohit Sharma
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றியை பதிவு செய்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. ஏப்ரல் ஏழாம் தேதி நடைபெற்ற 20வது லீக் போட்டியில் டெல்லியை 26 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்மை ஹாட்ரிக் தோல்விகளுக்குப் பின் புதிய கேப்டன் பாண்டியா தலைமையில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அதிரடியாக விளையாடி 235 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 49, இசான் கிஷான் 42, டிம் டேவிட் 45*, ரோமரியோ செபார்ட் 39*, கேப்டன் பாண்டியா 39 ரன்கள் எடுத்தனர். பின்னர் சேசிங் செய்த டெல்லிக்கு டேவிட் வார்னர் 10, கேப்டன் ரிஷப் பண்ட் 1, அக்சர் படேல் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ரோஹித்தின் சாதனை:
அதனால் பிரிதிவி ஷா 66 (40), அபிஷேக் போரேல் 41 (31), ட்ரிஷட்ன் ஸ்டப்ஸ் 71* (25) ரன்கள் அடித்து போராடியும் 20 ஓவரில் 205/8 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி தோல்வியை சந்தித்தது. மும்பைக்கு அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 4, பும்ரா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த வெற்றிக்கு ஒரே ஓவரில் 32 ரன்கள் அடித்து மொத்தம் 39* (10) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ரொமாரியோ ஃசெபார்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பைக்கு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடினார். அந்த வகையில் பவர் பிளே ஓவர்களில் அசத்திய அவர் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 49 ரன்களில் அக்ஸர் படேல் சுழலில் அவுட்டாகி அரை சதத்தை அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிக முறை 49 ரன்களில் அவுட்டான வீரர் என்ற பரிதாப சாதனையையும் ரோஹித் படைத்துள்ளார்.

- Advertisement -

இதுவரை ஐபிஎல் தொடரில் அவர் 3 முறை 49 ரன்களில் அவுட்டாகியுள்ளார். இதற்கு முன் டேவிட் வார்னர், கிறிஸ் லின், சஞ்சு சாம்சன், ப்ரெண்டன் மெக்கல்லம், கிறிஸ் கெயில் தலா 2 முறை 49 ரன்களில் அவுட்டானதே முந்தைய சாதனையாகும். இருப்பினும் 181.48 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி 234 ரன்கள் அடிப்பதற்கு தேவையான நல்ல துவக்கத்தை கொடுத்த ரோகித் சர்மா இப்போட்டியில் அடித்த 3 சிக்சரையும் சேர்த்து டெல்லிக்கு எதிராக 49 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

இதையும் படிங்க: 12 பந்தில் 51 ரன்ஸ்.. மொத்தமாக 234 ரன்ஸ்.. டெல்லியை துவைத்த மும்பை.. தனித்துமான உலக சாதனை

இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற எம்எஸ் தோனியின் சாதனையை உடைத்துள்ள ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 49, டெல்லிக்கு எதிராக*
2. எம்.எஸ். தோனி : 46, பெங்களூருவுக்கு எதிராக
3. ரோஹித் சர்மா : 38, கொல்கத்தாவுக்கு எதிராக
4. விராட் கோலி : 38, சென்னைக்கு எதிராக
5. எம்.எஸ். தோனி : 38, டெல்லிக்கு எதிராக

Advertisement